உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்! சென்னை ஐகோர்ட் அதிரடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்! சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த கட்சியின் சார்பில் தனித்தனியே சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ybgyoqm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்து வழக்குகளும் ஐகோர்ட் நீதிபதி டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி அவர்கள் உத்தரவிட்டனர். போலீசாருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் தமிழக போலீசாருக்கு அவர்கள் உத்தரவிட்டனர். வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து பா.ம.க., வக்கீல் பாலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக போலீஸ் அதிகாரி தலையிட முடியாத வகையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் நீதிபதியிடம் எங்கள் வாதங்களை எடுத்து வைத்தோம். விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு உகந்த வழக்கு என்ற அடிப்படையில் அதற்கான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு. பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த போதே தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி இருக்க வேண்டும். மாறாக, அதை மூடி மறைக்கவே முயன்ற அரசின் நடவடிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.இந்த மரணத்துக்கு காரணமானவர்கள், பின்னணியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அது நிகழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் மூலம் ஒரு புதிய கோணத்தில் விசாரணை தொடங்க இருக்கிறது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

amuthan
நவ 21, 2024 07:41

அப்படியே அந்த பொள்ளாச்சி கேஸை சிபிஐ க்கு மாத்தி விடுங்க


அப்பாவி
நவ 20, 2024 21:00

இந்த தொப்பைகளிடமிருந்து அந்த தொப்பைகளுக்கு மாத்தி உடறாங்க. அவ்ளோதான். பயம் வாணாம். பீதி வாணாம்.


duruvasar
நவ 20, 2024 15:37

நாங்க ஏற்கனவே தலா 10 லச்சம் கொடுத்து கேஸை ஊத்தி மூடிவிட்டோம் மீ லார்ட் .


Rengaraj
நவ 20, 2024 15:08

அப்போ வேங்கைவயல் விவகாரத்தையும் அவங்க விசாரணை பண்ணட்டும்னு மாத்திடலாமே அதுவும் ரெண்டு வருஷமா இழுத்துட்டுஇருக்கு.


Krishnamurthy Venkatesan
நவ 20, 2024 14:30

அப்படியே 3 மாதங்களுக்குள் விசாரணையை சிபிஐ அமைப்பு முடிக்க வேண்டும் என்றும் 5 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க வேண்டும் என்றும் யாரேனும் உத்தரவு போட்டால் நன்றாக இருக்கும்.


sridhar
நவ 20, 2024 14:20

எதற்காக மாநில அரசு பயப்படுகிறது . திமுக vck பிரமுகர்களை காப்பாற்றமுடியாது என்பதாலா .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 20, 2024 14:10

கோர்ட்டு கூட திராவிட மாடலை நம்பவில்லை ....


Dharmavaan
நவ 20, 2024 20:47

எல்லாம் தனிப்பட்ட நீதிபதியை பொறுத்தது


பாமரன்
நவ 20, 2024 13:28

டீம்காகாரனுவ கொஞ்சம் கோட்டைவிட்டதாதான் சொல்லணும்.. வழக்கம் போல ஆரம்ப விசாரணையில் சாட்சியங்களை அழிச்சிட்டு நாங்க நேர்மையான விசாரணை? நடக்க சிபிக்கு ரிக்வஸ்ட் பண்றோம்னு சொல்லிட்டு தப்பிச்சிருக்கலாம்... மக்களும் அய்யோ இன்னா நேர்மைன்னு நம்பியிருப்பாங்க... இப்போ வடை போச்சு.. அட சிபிபிபி ஒன்னும் அறுத்து தொங்க போடப்போறதில்லை.. இருந்தாலும் எங்க ஆடுசார் டூர் முடிஞ்சி வரும்போது பாயிண்டை ரெடியா எடுத்து குடுத்து காமெடி டிராமா ஓப்பனிங்குக்கு வழி வகுத்துட்டாங்கன்னு தான் சொல்லணும்... பார்ப்போம்...


S.Martin Manoj
நவ 20, 2024 13:11

அப்படியே சிபிஐ அறுத்து தல்லிடுவாங்க, போங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வச்சு உருப்பட பாருங்க


Duruvesan
நவ 20, 2024 15:15

FBI வந்தாலும் ஒன்னும் முடியாது, திராவிட மாடல் அது


N PALANISAMY
நவ 20, 2024 12:51

சபாஷ் ??????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை