உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழகம்

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என, காவிரி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டத்தில், கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை பெறுவோம் என தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறினார். காவிரி ஒழுங்குமுறை குழுவின் 95வது கூட்டம் நேற்று( ஏப்.,30) டில்லியில் நடைபெற்றது. இதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அனைத்து உறுப்பினர்களும், அவர்களது மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் இருந்தே பங்கேற்றனர்.

ஆலோசனை

தமிழக அரசின் உறுப்பினராக, தலைமை பொறியாளர் சுப்ரமணியன் பங்கேற்றார். ஆலோசனையின்போது, மேட்டூர், பவானி சாகர், அமராவதி அணைகளின் நீர் இருப்பு நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்துக்கு இதுவரையில் தர வேண்டிய நிலுவை நீரை தர வேண்டுமென, புள்ளிவிபரங்களுடன் எடுத்து கூறப்பட்டது.'மேட்டூர் அணையில் நீர் இருப்பு 20.182 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. இதில், 1,200 கன அடி நீர், குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காக மட்டுமே வெளியேற்றப்படுகிறது. 'மே மாத சுற்றுச்சூழல் நீர் அளவான 2.5 டி.எம்.சி., நீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழகத்துக்கு ஏற்கனவே தர வேண்டிய நீர் அளவான, 5.317 டி.எம்.சி., மற்றும் மே மாதத்தில் தர வேண்டிய 2.5 டி.எம்.சி.,யையும் சேர்த்து, மொத்தமாக தர வேண்டுமென்றும் கேட்கப்பட்டது.

கோரிக்கை

ஆனால், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, அம்மாநில குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருப்பதால், தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என, அம்மாநில உறுப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இருப்பினும், புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறி, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கும்படி ஒழுங்குமுறை குழு சார்பில், கர்நாடகா தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது. அப்போதும், தங்கள் மாநில தேவைகளுக்குத்தான் நீர் உள்ளதென கூறி, இந்த கோரிக்கையை ஏற்க அம்மாநில அரசின் உறுப்பினர் மறுத்து விட்டார். இந்த குழுவின் அடுத்த கூட்டம், வரும் 16ம் தேதி மீண்டும் நடக்கவுள்ளது.

தகவல்

இந்நிலையில், சென்னையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: காவிரியில் நீர் தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி உரிய நீரை பெறுவோம். என்றைக்காவது ஒரு நாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என கர்நாடகா கூறியுள்ளதா? அதிகம் இருந்தாலும், குறைவாக இருந்தாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று தான் கர்நாடகா கூறும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

spr
மே 01, 2024 18:01

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றத்திற்கு கொண்டு போனால் ஒரு தலைமுறைக்கு தீர்ப்பு வராது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து பல காலம் நீட்டிக்கும் கர்நாடகாவிலேயே நீர் தட்டுப்பாடு எனும் போது நீதிமன்றமும் என்ன செய்ய முடியும் அதனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று சொல்லித் தப்பிக்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் காங்கிரசை அடிமையாக வைத்திருக்கும் ஒரு கட்சியால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுடன் சுமுகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாதா கூட்டணியில் இருக்கும் போதே இந்த ஒரு பிரச்சினையையே தீர்க்க இயலாதவர்கள் நாளை அகில இந்தியாவையும் எப்படி ஆளப்போகிறார்கள்

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 01, 2024 20:26

காங்கிரஸை திமுக அடிமை படுத்தி கொண்டுள்ளதாக தமிழக மக்கள் எண்ணிக் கொண்டு உள்ளனர் ஆனால் இந்த காவேரி விவகாரம் பார்க்கையில் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் கூறிய ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது தமிழகமே தண்ணீர் கேட்கவில்லை நீங்கள் எதற்கு கேட்கிறீர்கள் என்று பத்திரிகை நிருபர்களை கேட்டதை வைத்து பார்க்கும் போதும் அதிமுக ஆட்சியில் இந்த காவேரி பிரச்சினை வைத்து திமுக அதிமுக அரசை செயல் படுத்த விடாமல் போராட்டம் நடத்தி தொந்தரவு செய்த காலங்களை நினைத்து பார்த்து தற்போது நீர் வளத்துறை மந்திரி மற்ற அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர்கள் அமைதியாக இருப்பதை பார்த்தால் திமுக காங்கிரஸை அடிமைப்படுத்தி வைக்கவில்லை என்பதும் காங்கிரஸ் தான் திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது போல் தெரிகிறது காங்கிரஸ் இடம் திமுக இவ்வளவு அமைதியாக நடந்து கொள்வதை பார்த்தால் திமுக ஏதோ மிகப்பெரிய தவறு செய்துள்ளது போல் தெரிகிறது அதை மறைக்க மத்தியில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் செய்த தவறை மறைத்து விடலாம் என எண்ணிக் கொண்டு உள்ளது போல் தெரிகிறது

spr
மே 01, 2024 18:00

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றத்திற்கு கொண்டு போனால் ஒரு தலைமுறைக்கு தீர்ப்பு வராது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து பல காலம் நீட்டிக்கும் கர்நாடகாவிலேயே நீர் தட்டுப்பாடு எனும் போது நீதிமன்றமும் என்ன செய்ய முடியும் அதனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று சொல்லித் தப்பிக்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் காங்கிரசை அடிமையாக வைத்திருக்கும் ஒரு கட்சியால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுடன் சுமுகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாதா கூட்டணியில் இருக்கும் போதே இந்த ஒரு பிரச்சினையையே தீர்க்க இயலாதவர்கள் நாளை அகில இந்தியாவையும் எப்படி ஆளப்போகிறார்கள்

spr
மே 01, 2024 18:00

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றத்திற்கு கொண்டு போனால் ஒரு தலைமுறைக்கு தீர்ப்பு வராது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து பல காலம் நீட்டிக்கும் கர்நாடகாவிலேயே நீர் தட்டுப்பாடு எனும் போது நீதிமன்றமும் என்ன செய்ய முடியும் அதனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று சொல்லித் தப்பிக்கலாம் அவர்கள் மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் காங்கிரசை அடிமையாக வைத்திருக்கும் ஒரு கட்சியால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுடன் சுமுகமாகப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாதா கூட்டணியில் இருக்கும் போதே இந்த ஒரு பிரச்சினையையே தீர்க்க இயலாதவர்கள் நாளை அகில இந்தியாவையும் எப்படி ஆளப்போகிறார்கள்

naranam
மே 01, 2024 17:17

இந்தியா கூட்டணி உதவியால் வென்ற mp பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா திமுக?

தமிழ்வேள்
மே 01, 2024 15:03

திமுக காங்கிரஸ் இரண்டுமே தரித்திரம் பிடித்த தோசி கட்சிகள் மக்களை குடிகாரன் ஆக்கி பிச்சை எடுக்க வைப்பது மட்டுமே இவர்களது கொள்கை தெய்வ நம்பிக்கை அற்ற இந்த கும்பலின் மீது இயற்கைக்கு கூட இரக்கம் பிறக்காது இன்றைய தண்ணீர் பஞ்சம் திமுகவுக்கு ஓட்டு போட்டதற்கான தண்டனை

Chinnamanibalan
மே 01, 2024 13:28

இன்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஆதரவை திமுக விலக்கி கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஒருபக்கம் இன்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு மறுபக்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் உள்ளது.

Nagarajan D
மே 01, 2024 13:03

உங்க கொள்ளை கூட்டாளி தானே அங்கே ஆட்சியிலிருக்கிறார்? அவரிடம் உரிமையுடன் கேட்கவேண்டியதுதானே? கொள்ளையில் மட்டும் பங்கு என்னங்கடா உங்க கூட்டணி இவனுங்களுக்கு ஒட்டு போடும் தமிழனை என்ன சொல்ல

குமரி குருவி
மே 01, 2024 12:53

காவிரியில் தண்ணீர் வந்தால் தி.மு.க.பிழை நின்று விடுமே

Maakiraam
மே 01, 2024 12:26

பேசித் தீர்க்கவேண்டிய விஷயத்தை கோர்ட் மூலம் சாதிப்போம் என்று துரை அவர்கள் சொல்லும்போது இவர்கள் நலனில் அக்கறை உள்ள சில வக்கீல்களுக்கு அரசு பணம் சென்று சேரப்போகிறது போல.

Kumar Kumzi
மே 01, 2024 11:46

இதுதான் புள்ளி கூட்டணியின் உண்மை முகம் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சின்னாபின்னமாகிவிடும் விடியல் ஒரு வேர்ஸ்ட்டு பீசு

மேலும் செய்திகள்

புதிய வீடியோ