உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் பலி மத்திய அரசு நிவாரணம்

கரூர் கூட்ட நெரிசல் பலி மத்திய அரசு நிவாரணம்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த, 41 பேரின் குடும்பத்திற்கு, மத்திய அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ம் தேதி நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற் பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வங்கி கணக்கில், நிவாரண நிதி மத்திய அரசால் செலுத்தப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்களுக்கு, விரைவில் தலா 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை