உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம்: பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

கரூர் சம்பவம்: பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 16 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 13 ஆண்கள் பலியாகினர்.கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 90பேர் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இறந்த 39 பேர்களில் 35 பேர்களின் உடல் அடையாளம் காணப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்.28) அதிகாாலை 4 மணியளவில் வருகை தந்தார். இறந்தவர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

The Mechanic
செப் 28, 2025 11:00

குறைகுடம் கூத்தாடும், மாக்கள் எப்போது சிந்திக்கவும் சுயமாக உழைக்கவும் ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் உலக நாடுகளின் தரத்திற்கு நாம் செல்ல முடியும், அதை விடுத்து எந்த வலியுமின்றி, சேவையுமின்றி மாயை உலகத்தின் கதாநாயகனை, நிஜ உலகின் நாயகனாக நினைத்தால் நம் அழிவை நம் கண் முன்னே காணலாம்! இன்றைய அரசியல் களம் மாற்றப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை, ஆனால் அதற்கு தகுதியான ஆட்கள் முன் வர வேண்டும், இல்லையென்றால் அனைத்து கட்சியிலும் கட்ட பஞ்சாயத்து செய்வதற்கென்றே கட்சியில் இருந்து கொண்டு நாட்டை நாசமாக்கும் கூட்டங்கள் அதிகமாகி விடும்!! ஜெய்ஹிந்த்!!!


Gajageswari
செப் 28, 2025 09:55

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட தீயணைப்பு துறை தலைவர் பணிநீக்கம் செய்ய வேண்டும்


VENKATASUBRAMANIAN
செப் 28, 2025 08:58

இவருடைய காவல்துறை தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம். ஆனால் அரசியல் செய்து கோட்டை விட்டு விட்டார்கள்.


pakalavan
செப் 28, 2025 06:16

தூக்கில போடனும்


Ramesh Sargam
செப் 28, 2025 03:55

கல்வராயன் மலை கள்ள சாராய மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே. அப்படி கூறுவதால் நான் இந்த மரணங்களை நியாப்படுத்துகிறேன் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள் . அதுவும், இதுவும் வருத்தமான நிகழ்வுகள்தான். மக்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும். அரசியல்வாதிகள், சினிமாகாரர்கள் பின் செல்வதை நிறுத்தவேண்டும். அரசியல்வாதிகள் இது போன்ற மரணங்களை வைத்து அரசியல் செய்வதை முற்றிலும் நிறுத்தவேண்டும். மாணவர்கள் அரசியல் நினைப்பு இல்லாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும்.


essemm
செப் 28, 2025 03:36

இறந்தவர்களை குடும்பத்திற்கு குறைந்தது 2000000 ஆவது கிடைக்க அரசு ஆவண செய்யவேண்டும். அரசிடம் அதற்கு பணம் இல்லையென்றால். விஜயிடம் இருந்து பெற்றுக்கொடுக்கவேண்டும். ஒரு படத்துல ஹிற்கு 100150 கோடிகள் சம்பளமாக பெறுகிறான் இல்லையா. அதில் கொஞ்சம் குறைந்தால் அவன் ஒன்னும் சாக மாட்டான்.


visu
செப் 28, 2025 05:54

ஏன் இந்த பொறாமை அவர் உழைக்கிறார் சம்பாதிக்கிறார் உங்களால் முடியவில்லை எண்பதலா கூட்டம் பிரச்சினை காவலர்கள் அனுமதி கொடுக்க பல நிபந்தனைகள் போட்டார்கள் எதேர்க்கு இது போன்று நடக்காமல் தடுக்கவே இல்லை சும்மா இடைஞ்சல் கொடுக்கவா


Veeraputhiran Balasubramoniam
செப் 28, 2025 06:13

50 கோடி அல்லது 100 கோடி கொடுத்தால் விஜய்க்கு அடுத்த படத்தில் இவர்களிடம் வசூலித்து விடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை