உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தகைசால் தமிழர் விருது காதர் மொய்தீன் தேர்வு

தகைசால் தமிழர் விருது காதர் மொய்தீன் தேர்வு

சென்னை:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கு, தமிழக அரசின் 'தகைசால் தமிழர் விருது' அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை, பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர் விருது' தமிழக அரசால் வழங்கப்படுகிறது. விருதாளர்களை தேர்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, 2021ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் சங்கரய்யா, நல்லக்கண்ணு, வீரமணி, குமரி ஆனந்தன் ஆகியோருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. நடப்பாண்டு விருதுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, சுதந்திர தினவிழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதை வழங்கி கவுரவிப்பார். விருதுடன், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Guru
ஜூலை 06, 2025 14:49

இவர் தமிழுக்கோ தமிழ் நாட்டுக்கோ என்ன செய்தார் என்று தெரியவில்லை. திருட்டு கட்சி ஓட்டுக்காக இதையெல்லாம் செய்கிறது.


Bhaskaran
ஜூலை 06, 2025 10:42

இவர் என்ன செய்தார் இறந்து போன பெருங்கவிகோவுக்கு தந்திருக்கலாம்


Jagan (Proud Sangi )
ஜூலை 05, 2025 02:34

"தமிழர் விருது" - அண்ணன் சீமான் தான் சரியாக சொன்னாரே யார் நிஜ தமிழன் என்று. இவருக்கு பொருந்தாதே ....ஹ்ம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை