உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவரைப்பேட்டை ரயில் விபத்து; சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து; சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு சம்மன்

சென்னை: சென்னை கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ரயில் விபத்து நடந்த இடத்தில், நட்டு, போல்டுகள் கழன்ற நிலையில் இருந்ததால், விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், விரைவு ரயிலின், 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. இந்த விபத்தில், அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.ரயில், தொழில்நுட்ப பிரச்னையால், பிரதான பாதைக்கு பதிலாக, 'லுாப் லைன்' எனப்படும், கிளை பாதையில் மாறிச் சென்றது தான் விபத்துக்கு காரணம். விபத்து நடந்த இடத்தில், போல்,நட்டுகள் கழன்ற நிலையில் கிடந்ததால் சதி வேலை ஏதும் நடந்ததா என அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று(அக்.,14) சிக்னல், இன்ஜினியரிங் பணியாளர்கள் 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே விபத்து தொடர்பாக, ரயில் ஓட்டுனர்கள், சிக்னல் தொழில்நுட்பம், நிலைய மேலாளர்கள், கட்டுப்பாட்டு அறை உட்பட, 13 பிரிவுகளின் பணியாளர்கள், அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 14, 2024 13:16

இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் பயணியர்களின் உயிரை காக்கவேண்டியது ரயில்வே துறையினரின் பொறுப்பு. நாட்டில் சதிவேலை செய்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அவர்களை ஊக்குவிப்பது நமது நாட்டில் உள்ள தேசதுரோக எதிர்க்கட்சியினர். முதலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை