உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேசும் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்: சதுரங்க வேட்டை பாணியில் மோசடி செய்த 6 பேர் கைது!

பேசும் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்: சதுரங்க வேட்டை பாணியில் மோசடி செய்த 6 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: சிலைக்கு அபூர்வ சக்தி உள்ளதாகவும், வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்றும் தேனியை சேர்ந்த பக்தருக்கு ஆசை காட்டி, ஒரு கோடி ரூபாய்க்கு சிலை விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்த பக்தர் ஒருவரை, 6 பேர் கொண்ட கும்பல் அணுகி ஆசை வார்த்தை கூறியது. 'எங்களிடம் உள்ள சாமி சிலைக்கு பூஜை செய்தால், அது உங்களிடம் பேசும்; அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்' என, சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல பேசியுள்ளனர்.சிலையை ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசி ஐந்தாயிரம் ரூபாய் முன்பணமும் பெற்றுள்ளனர்.எனினும் அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லாத அந்த பக்தர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ajysz67t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனடிப்படையில் சிலையை விற்பனை செய்வதற்காக வந்த மதுரை மாவட்டம் பேரையூர் ஆத்தாங்கரைப்பட்டியை சேர்ந்த தங்கமணி( 41), ஆ.கல்லுப்பட்டியை சேர்ந்த சிவா(29), டி. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்களான சம்பழகு(29), சூர்யபிரகாஷ்(21), மற்றும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த பாலமுருகன்(35) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ரவிச்சந்திரன்(52), ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.மோசடிக்கு பயன்படுத்திய சிலை, கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.சிலை எந்த உலோகத்திலானது என மதுரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Oviya Vijay
ஜன 25, 2025 13:27

ஆக இங்கே நிரூப்பிக்கப்பட்டிருப்பது என்னவெனில் கடவுளும் பேசாது... கடவுள் சிலைகளும் பேசாது... சரி தானே...


Puratchi Thondan
ஜன 25, 2025 07:45

முட்டாள், மூடனே எனப்பேசும்.


Barakat Ali
ஜன 25, 2025 07:41

குடும்ப கட்சியில் சேர தகுதியுள்ளவர்கள் ....


D.Ambujavalli
ஜன 25, 2025 05:43

பாடுபட்டு உழைத்து ஒரு கோடி சேர்க்க எத்தனை காலம் ஆயிருக்கும் அவருக்கு மிகுதிக்காலமும் தான் செய்யும் தொழிலில் அத்தொகையை முதலீடு செய்தால் கோடிகள் தானே சேருமே எப்படியோ இது மோசடி என்று தோன்றி தப்பித்துவிட்டார் இதுதான் அவர்களுக்கு முதல் attempt ஓ அல்லது வேறு ஏமாளிகள் எத்தனை பேர் மாட்டினார்களோ?


Ramesh Sargam
ஜன 24, 2025 22:10

அந்த பக்தருக்கு கொஞ்சம் அறிவு வேண்டாம்? அப்படி செல்வம் பெருகும் என்றால், விற்கமுயன்ற அந்த கூட்டத்திலேயே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அந்த சிலையை அவர்களே வைத்திருக்க மாட்டார்களா? சிந்திக்கவேண்டும் பக்தர்.


நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:24

அதனால்தான் அவர் போலீசில் சொல்லியுள்ளார்


Natchimuthu Chithiraisamy
ஜன 29, 2025 11:46

பத்தர் நல்ல செயல் செய்துள்ளார். இவர் போல் இறைவனுக்கு துரோகம் செய்யும் அரசு அதிகாரிகள் துணிவுடன் நல்ல சேவை செய்ய வேண்டும் என வேண்டுவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை