உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் ஆப்சென்ட்

பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் ஆப்சென்ட்

சென்னை: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க சென்றதால், அமைச்சர் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தியாகராஜன் , சபைக்கு வரவில்லை.இது பற்றி எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள் பலரும் விசாரித்துக் கொண்டனர். அப்போதுதான் அமைச்சர் தியாகராஜன் கேரளா சென்ற தெரியவந்தது.லோக்சபா தொகுதி மறுவரையை மேற்கொள்ளக் கூடாது என, மத்திய அரசிற்கு அழுத்தம் தரும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது தொடர்பாக, சென்னையில் 22ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க வரும்படி, 6 மாநில முதல்வர்கள் உள்பட, 29 மாநில கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதை, அமைச்சர்கள் நேரில் சென்று வழங்க, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை முதல்வர் நியமித்துள்ளார். அதன்படி, அமைச்சர்கள் நேரு, வேலு, பொன்முடி உள்ளிட்டோர், அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களை சந்தித்து திரும்பியுள்ளனர்.ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திப்பதற்கு அமைச்சர் தியாகராஜன், திருவனந்தபுரம் சென்றதால், அவர் சபைக்கு வரவில்லை. கேரளா முதல்வரை, அமைச்சர் தியாகராஜன் மற்றும் எம்.பி., தமிழச்சி ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த படம் தி.மு.க., தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் நிதி அமைச்சர் ஆன தியாகராஜன், நிதித்துறையில் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றார். அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், அவரிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக, முக்கியத்துவம் இல்லாத தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது, சட்டசபையில் பேசுபொருளாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

M Ramachandran
மார் 16, 2025 11:18

பினாயிலை சந்தித்து தீ மு கா வைய்ய பினாயில் விட்டு சுத்த படுத்துவதற்கு முயற்சியா


Kjp
மார் 16, 2025 09:40

ஆக யாரும் தானாக வருகிறேன் என்று சொல்லல.போய்தான் கூப்பிடுகிறார்கள். தடியால் அடித்து கனிய வைக்கிறீர்கள். நல்ல கோமாளித்தனம்.


Ambedkumar
மார் 16, 2025 09:31

திரு PTR பேசுவதைக் கூர்ந்து கவனித்தால் அவர் செய்யும் வாதங்கள் அடிப்படை அறிவுக்கு வெகு தூரத்தில்தான் இருக்கும். சமீபத்தில், புதிய கல்விக்கொள்கை வடக்கத்தி மாடல் என்றும அதை தமிழகத்தில் நன்றாகச் கொண்டிருக்கும் கல்வியின் மீது திணிப்பதாகவும், இதையறியாதவர்கள் முட்டாள்கள் என்றும் பேசினார். புதிய கல்விக்கொள்கை புதிதாக உருவாக்கப்பட்டது என்பதும், வடக்கிற்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும், மேலும் புதிய கொள்கையில் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளே தங்களுக்கு ஏற்ற ஒரு சில மாற்றங்களை செய்து கொள்ளலாம் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் இந்தியாவில் உள்ள மற்ற 27 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டனர். புதிய கல்விக்கொள்கையை ஏற்றதன் வாயிலாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களெல்லாம் முட்டாள்கள் என்று சொல்கிறார்.. மேலும், தமிழகத்தின் கல்வி மற்ற மானிலங்கை விட சிறந்தது என்பது உண்மைக்குப் புறம்பானது என்று ASER 2024 அறிக்கையைப் படித்தால் தெரியும். மெத்தப் படித்தவரின் அறிவுத்திறனைப் பாருங்கள்.


A.Muralidaran
மார் 16, 2025 09:19

இரு மாநிலங்கள் இடையான தன்னுடைய தாத்தா ஏமாற்றி சம்பாதித்த சொத்தை பாதுகாக்க சென்றதாக கேள்வி


Ray
மார் 16, 2025 08:28

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் வாசிக்கும்போது PTR அவையில் இருந்ததை காணொளியில் கண்டோம். சரிபார்த்துக் கொள்ளலாம்.


sankaranarayanan
மார் 16, 2025 08:18

கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க சென்றதால், அமைச்சர் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏன் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் அங்கே செல்லக்கூடாதா என்ன அவசரம் அவருக்கு அதில் விருப்பம் இல்லை கேரளா முதல்வர் சிறுவாணி அணை பரம்பிக்குளம் அணை இவைகளில் வேலைகளை கவனிப்பதால் இப்போது இந்த கூட்டத்திற்கு வர இயலாது இந்த கூட்டம் இண்டியா கூட்டணி போலவே நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தவிட்டதுபோனமன்றே சிதறிவிடும்


PalaniKuppuswamy
மார் 16, 2025 07:00

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். இவரின் ஊண்டமுற்ற திறமைக்கு ஊன்றுகோலாக 5 உலகளாவிய நிபுணர் குழ அம்மைத போதே.. இவர் மூட்டை கட்டிக்கொண்டு அமெரிக்கா சென்று இருந்தால் மானம் உள்ளவர் என்று மதித்திரு இருக்கலாம். நிதி துறை மாற்றிய பொது ராஜினாமா செய்திருந்தால் சிறிது மானம் உளது என்று சற்று மனிதனாக மதித்து இருக்கலாம். ஆனால் இப்போது உள்ள மனிதர் ஒரு நடை பிணம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்


venkatarengan.
மார் 16, 2025 06:36

படித்தவன் தப்பு செய்தால் அய்யோ அய்யோ என்று பாரதியார் கூறினார். ஆனால் சிதம்பரம், தியாகராஜன் போன்றவர்களை பார்க்கும் பொழுது படித்தவன் தப்பு செய்தால் ஆஹா, ஓஹோ என்று இருப்பான் என பாடியிருப்பவர்.


Kasimani Baskaran
மார் 16, 2025 06:20

சாராய சாம்ராட்ஜய்யாம் சரிவதை கண்டு மனம் வெதும்பி திராவிடர்கள் வேறு வழியில்லாமல் மடைமாற்ற எளிதான ஒரு உத்திதான் "ஹிந்தி திணிப்பு" என்ற நாடகம். அதற்கடுத்து பிரதிநிதித்துவம் பற்றிய தொகுதிகளை அதிகரிக்கக்கூடாது என்ற உருட்டல். ஏதாவது ஒரு விஷயத்தில் பொழுதைப்போக்கி வேலை செய்யாமல் காலம் கடத்துவது இவர்களின் குணாதிசயம்.


Appa V
மார் 16, 2025 04:58

மீனாக்ஷி அம்மன் கோவில் அறங்காவலரா இவரை நியமிக்கலாம் ..கோவில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை