உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிட்னி விற்பனை; ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது ஐகோர்ட் கிளை

கிட்னி விற்பனை; ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கிட்னி விற்பனை விவகாரத்தை விசாரிக்க தனி விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'கிட்னி விற்பனை முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை, சிபிஐ நடத்த உத்தரவிட வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை?,' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, புகார் அளித்தால் மட்டுமே குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், 'பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தெரிந்தபிறகு வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது. பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில், நீலகிரி எஸ்பி நிஷா, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், கோவை எஸ்பி கார்த்திகேயன், மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழு நடத்தும் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் நேரடியாக கண்காணிக்கப்படும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப். 24 க்குள் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க வேண்டும்,' இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 07:38

இங்க ஒரு மூர்க்கனுக்கு கிட்னி திருட்டைப் பத்தி கவலையே இல்ல. ஏன்னா அவனுடைய மார்க்கத்தின் படி உறுப்புதானம் பெறலாம்.. வழங்கக்கூடாது... ரபேல் பத்தி இவனை மாதிரியே பேசுன பப்புவால நிரூபிக்க முடிஞ்சுதா >>>>


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 07:13

[ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது ஐகோர்ட் கிளை] ஐ ஜி சார் பெரிய சாரின் கட்டுப்பாட்டில்தானே இயங்கி ஆகணும். கேட்கணும் ன்னு தோணுச்சு .... கேட்டேன் ....


SUBBU,MADURAI
ஆக 26, 2025 03:39

தமிழக ஐஜி தலைமையில் விசாரனைக் குழுவா? வெளங்கின மாதிரிதான் ம் ஹூம் இந்த கேஸ் தேறாது


rama adhavan
ஆக 25, 2025 23:13

மற்றவர் கிட்னியை பிடுங்கிய அந்த அரசியல் நபர் தனது, தனது குடும்பத்தினர் எவ்வளவு பேரின் ஒரு கிட்னியை இழந்து உள்ளனர் என்ற விபரத்தையும் போலீஸ் / நீதிமன்றம் பெற வேண்டும்.


திகழ்ஓவியன்
ஆக 25, 2025 21:17

இதில் என்ன விசாரணை , கிட்னி வைத்து என்ன கஞ்சா மாதிரி கெட்ட பொருளா , இதனால் கிட்னி கொடுத்தவனுக்கு LUMP AMOUNT , பணம் கொடுத்தவனுக்கு உயிர்க்கு உதவி இருக்கு இதில் என்ன இருக்கு , இடையில் கம்சின் , ரபில் விமானம் DEALING 10 % கமிஷன் என்று பேச்சு அப்புறம் என்ன


ஆரூர் ரங்
ஆக 25, 2025 21:49

கிட்னி பெயிலியர் நோயாளியின் குடும்பத்தவர் என பொய்யாக ஆவணத்தை உருவாக்கி சிரமதசையில் இருப்பவரிடம் கிட்னியை பிடுங்கியது எப்படிப்பட்ட குற்றம்,? அயலகஅணி ஆளு கஞ்சா, மெத் கடத்தியதற்கே முட்டுக் கொடுத்த ஆளுங்க இதையும் நியாயப்படுத்துவதில் ஆச்சரியமில்லை.


rama adhavan
ஆக 25, 2025 23:08

அப்போ உனது மற்றும் உனது குடும்பத்தினர் 2 கிட்னிகளில் ஒன்றை தானமாக கொடுத்து உதவேன், செய்வாயா?


vivek
ஆக 26, 2025 08:26

கிட்னி கிடக்கும்...ஆனால் மூளை கிடைக்காது...என்னா அது இல்லை.. ஹி.. ஹி.


Artist
ஆக 25, 2025 20:35

வடக்கன்ஸ் விசாரணைக்குழு என்பதால் சிக்கல் dhaa


பிரேம்ஜி
ஆக 25, 2025 20:19

விசாரணை ஒரு பத்து வருடங்களுக்கு நடக்கும்! பிறகு கமிஷன் திரும்பவும் அமைக்கப்படும்! முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் இன்னும் இருக்கிறதா? ஒரு செய்தியும் காணோமே!


Priyan Vadanad
ஆக 25, 2025 20:01

வரும் தீர்ப்புக்கு நீதிமன்றம் மூலம் தடையுத்தரவு வாங்கிவிடுவோம்ல.


ஆரூர் ரங்
ஆக 25, 2025 20:00

எல்லா ஐ ஜி களும் முதலமைச்சரின் கீழ்தான் பணியாற்றுகின்றனர். தி.மு.க எம்எல்ஏ வுக்கு எதிராக விசாரணை அறிக்கை கொடுக்க முடியுமா?.சிபிஐ விசாரணையை நடக்கவும் விடமாட்டார்கள் .


திகழ்ஓவியன்
ஆக 25, 2025 21:19

பாவம் இவர் ஆசை DMK க்கு எதிரா அறிக்கை வரணும் , கிட்னி என்ன கஞ்சாவா , யாரோ பெற்று உயிர் வாழ்கிறான் , RAFEL DEALING கமிஷன் அதே போல கிட்னி கமிஷன் , இது பெரிய விஷயமா


சமீபத்திய செய்தி