உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு குற்றவாளி சிவராமன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு குற்றவாளி சிவராமன் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: கிருஷ்ணகிரி பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்.சி.சி., முகாமில், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், 35, கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை போலீசார் நேற்று பதிந்தனர்.மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சிவராமன், தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஜூலை, 11ல் எலி பேஸ்ட் தின்று, தற்கொலைக்கு முயன்று, மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளார். தற்போது, பாலியல் பலாத்கார வழக்கில், தான் கைதாக போகிறோம் என்ற பயத்தில், கைதாவதற்கு ஒரு நாள் முன், மீண்டும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சித்தார்.சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அவரை, அனுப்பி வைத்தனர். அங்கு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவராமனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையும் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி உயிரிழந்த சிவராமனின் தந்தை, காவேரிப்பட்டினம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

ஆரூர் ரங்
ஆக 23, 2024 21:41

சாதிக் பாட்சா அண்ணாநகர் ரமேஷ் நினைவு வருகிறது.


theruvasagan
ஆக 23, 2024 17:48

குடிகார அப்பன் டூவிலர் விபத்தில் பலி. காமுக பிள்ளை எலிபேஸ்ட் சாப்புட்டு தற்கொலை. நல்லதொரு குடும்பம். பல்கலை கழகம். கழகம். கழகம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 23, 2024 13:43

இந்த திட்டம் வங்க தேச மங்கைக்கு தெரியவில்லை. சரி அடுத்த வழக்கில் உபயோகப்படும். விஞ்ஞான ரீதியாக..


Barakat Ali
ஆக 23, 2024 12:52

உண்மைக்குற்றவாளி யாரு ன்னு எந்த கொம்பனும் வம்பனும் கேட்டுர கூடாது ......


Anand
ஆக 23, 2024 12:33

இப்படித்தான் கமுக்கமா அமுக்கி கேஸை இழுத்து மூடனும்.... கடேசிவரைக்கும் மர்மத்தை யாராலும் அறியவிடக்கூடாது.


Ramesh Sargam
ஆக 23, 2024 12:27

அப்பா, மகன் எல்லோருமே குற்றவாளிகள் குடும்பம் போல தெரிகிறது.


RAAJ68
ஆக 23, 2024 11:31

காலில் எப்படி கட்டு வந்தது... அவனை அடித்து துன்புறுத்து காலையும் ஒடித்து எலி பேஸ்டையும் திங்க வைத்து... சாகடித்து விட்டனாரோ என்ற சந்தேகம் விழுகிறது.


Kogulan
ஆக 23, 2024 12:32

வருத்தமாக உள்ளதா?


sridhar
ஆக 23, 2024 11:00

எதிரிக்கட்சி ஆள் மாட்டினா விசாரணை எல்லாம் கிடையாது , டைரக்ட் தீர்ப்பு தான். ஆனா இதேபோன்ற குற்றத்தை குறிப்பிட்ட மத போதகர்கள் செய்தால் FIR கூட பதிவாகாது .


sridhar
ஆக 23, 2024 10:57

நாம் தமிழர் கட்சிக்காரர்களுக்கு மறைமுக எச்சரிக்கை … போலீசில் மாட்டினா சட்டினி , சூதானமா இரு ..


angbu ganesh
ஆக 23, 2024 10:50

எங்க அவன் பெரிய தலைகள் மாட்டிவிட்டுடுவானோன்ற பயத்துல இதை பண்ணி இருக்காங்க, ம்ம் கை புண்ணுக்கு கண்ணாடி


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி