கிருஷ்ணசாமி எச்சரிக்கை
கோவை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கோவை குனியமுத்துாரில் இன்று (நவ.,7) அளித்த பேட்டி: நடிகர் கமல், புதிதாக எடுக்கும் படத்திற்கு ‘சண்டியர்’ என பெயர் வைத்துள்ளார். 2003ம் ஆண்டு அவர் எடுத்த ஒரு படத்துக்கு இதே பெயரை வைத்தபோது இரு சமூகத்தார் இடையே பிரச்னையை ஏற்படுத்தியது. இத்தலைப்பை கைவிட வேண்டும் என, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பெயரை கமல் கைவிட்டார். ஆனால், 23 ஆண்டுகள் கழித்து, அதே பெயரில் படம் எடுப்பதாக, தற்போது அறிவித்துள்ளார். இப்பெயர் ஜாதி மோதலை துாண்டக் கூடியது. தமிழகத்தில் இப்பெயரில் அவர் படத்தை எடுக்கவும், ஓட்டவும் முடியாது. நிராகரிக்கப்பட்ட ஒரு பெயரை அனுமதித்தது குறித்து, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் நேரில் சென்று, பெயரை திரும்ப பெற வலியுறுத்துவேன். சட்டரீதியாகவும் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.