உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் குறித்து அவதுாறு குமரி இன்ஜினியர் கைது

முதல்வர் குறித்து அவதுாறு குமரி இன்ஜினியர் கைது

தக்கலை : கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரைச் சேர்ந்தவர் விஜில் ஜோன்ஸ், 40, சாப்ட்வேர் இன்ஜினியர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், விஜில் ஜோன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, மனோ தங்கராஜ் பற்றி அவதுாறு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, குமரி மாவட்ட தி.மு.க.,வினர் தக்கலை போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூரில் கைது செய்தனர். பெங்களூரில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த அவரை கைது செய்து, நேற்று தக்கலை அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ