உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது.பள்ளி முன்பு, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலையில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 20:15

பள்ளி நிர்வாகிகளை கோர்ட் விடுவித்து விட்டது. பெற்றவர்களுக்கு கொஞ்சம் பிச்சைக் காசு. பிள்ளைகளை பாதுகாப்பான பள்ளிகளில் சேர்க்க வேண்டியது பெற்றவர்களின் கடமை. முக்கியமாக திராவிட குடும்பங்கள் நடத்தும் கொள்ளைக் கூடங்களில் சேர்க்கக் கூடாது.


கல்யாணராமன்
ஜூலை 16, 2024 11:06

20 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஏதாவது தண்டனை விதிக்கப்பட்டதா இல்லையா? சட்டம் எந்த அளவுக்கு செயல் படுகிறது என்பதை இந்திய பிரஜைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


சத்திய மூர்த்தி
ஜூலை 16, 2024 10:30

அப்பாவி குழந்தைகளின் உயர் போவதற்காக இருந்தவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை. சாராயம் காய்ச்சுபவன் அரசியல்வாதி, இட ஒதுக்கீட்டில் வந்தவன் அரசு அதிகாரி. படித்தவருக்கு திறமை உள்ளவனுக்கும் மரியாதை இல்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ