மேலும் செய்திகள்
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
12 minutes ago
சென்னை : நடிகை கவுதமியின் நிலம் மற்றும் பணத்தை மோசடி செய்த சினிமா பிரமுகர் அழகப்பன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வருபவர் நடிகை கவுதமி. அவரது குடும்ப நண்பர் வேளச்சேரியை சேர்ந்த சினிமா பிரமுகர் அழகப்பன், 63. இவர், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், துாத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, கவுதமிக்கு சொந்தமான நிலங்களை விற்றுத் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார்.சென்னை நீலாங்கரையில், கவுதமிக்கு சொந்தமாக உள்ள, 6.5 ஏக்கர் நிலத்தை, மனைவி நாச்சாள், 57 பெயரில் பத்திரம் பதிவு செய்து, ஏமாற்றி உள்ளார்.இதற்கு இவரது மகன், சிவா, 32, மருமகள் ஆர்த்தி, 28, கார் ஓட்டுனர் சதீஷ்குமார், 27 ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கவுதமியின் வங்கி கணக்கில் இருந்து, அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், 9.90 கோடி ரூபாய் கையாடல் செய்து உள்ளனர்.இதுகுறித்து கவுதமி அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் விசாரித்து, அழகப்பன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில், அழகப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
12 minutes ago