உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழ்த்து சொன்ன விஜய்க்கு வரவேற்பு தெரிவித்தார் எல்.முருகன்

வாழ்த்து சொன்ன விஜய்க்கு வரவேற்பு தெரிவித்தார் எல்.முருகன்

மதுரை: 'விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னதை வரவேற்கிறேன்,' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.மதுரையில், நிருபர்கள் சந்திப்பில், எல்.முருகன் கூறியதாவது: சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது குடி தண்ணீர் இல்லாமலும், ஆம்புலன்ஸ் இல்லாமலும் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. ரயில்வே துறை பா.ஜ., ஆட்சியில் தான் வளர்ந்துள்ளது. பேப்பரில் மட்டும் படித்து கொண்டிருந்த புல்லட் ரயில், இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mpzc8ai5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வேதனையான ஆட்சி

மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரயில் விபத்தில் தி.மு.க., நாடகமாடுகிறது. ரயில் விபத்தில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவதூறு பரப்புகின்றன.ரயில்வே வேலை செய்யவில்லை என்று இண்டியா கூட்டணி தோற்றத்தை உருவாக்குகிறது. தி.மு.க., ஆட்சி முழுக்க, முழுக்க வேதனையான ஆட்சி. தமிழர் ஒவ்வொருவரும் வேதனைப்படும் ஆட்சியாக இருந்து கொண்டு இருக்கிறது. மின் கட்டணம் பல முறையில் உயர்ந்துள்ளது. ரூ.600 வந்த வீட்டில், இன்று ரூ.6 ஆயிரம் பில் வருகிறது. சொத்து வரி உயர்ந்துள்ளது.

ஜனநாயக நாடு

பத்திர கட்டணம் உயர்ந்துள்ளது. ஒரு பக்கம் வரி மேல் வரி உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம், மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் உள்ளன. கிராமங்கள் மற்றும் பள்ளிகள் வரை போதைப்பொருட்கள் சென்று சேர்ந்துள்ளது.விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னதை வரவேற்கிறேன். விஜயின் கொள்கை என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வைகுண்டேஸ்வரன்
அக் 13, 2024 20:55

10, 15 வருடங்களுக்கு முன்பு வரை, பொங்கல் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து தான் சொல்லிக்கொள்வோம். எப்போ மதவாதம் புகுந்ததோ அப்போ முதல், தைப்பூசம், கொலு, வரலட்சுமி விரதம், என்று கன்னபின்னான்னு வாழ்த்துக்கள் சொல்றாங்க. சொல்லல ன்னா கதறுகிறார்கள்.


சிவா
அக் 13, 2024 19:44

அண்ணாமலை அண்ணாமலை தான் .


சம்பா
அக் 13, 2024 12:46

இவர்க வாழ்த்தலணா பண்டிகை வாராத இவர்கள் என்ன , முனிவர்களா வாழ்த்த, ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை