உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு இல்லாதது சமூக அநீதி: ராமதாஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு இல்லாதது சமூக அநீதி: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கவர்னர் உரையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு இல்லாதது சமூக அநீதி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

தமிழகத்தில் கவர்னர் இல்லாமலேயே கவர்னர் உரை படிக்கப்பட்டிருக்கிறது. உரையை படிக்க வந்த கவர்னர், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி வெளிநடப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது. சபாநாயகரால் படிக்கப்பட்ட கவர்னர் உரையில், தமிழ கத்தின் வளர்ச்சிக்கான எந்த முக்கிய அறிவிப்பும் இடம் பெறாதது, பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு, கவர்னர் உரையில் இடம்பெறாதது, மிகப்பெரிய துரோகம்; சமூக அநீதி.மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற இலக்கை எட்ட, இன்னும் ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க வேண்டும். அது குறித்த அறிவிப்பு, கவர்னர் உரையில் இல்லை.'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வர். அதன்படி பார்த்தால், தமிழக அரசு என்ற சட்டியில் எதுவும் இல்லாததால், கவர்னர் உரை என்ற அகப்பையில் எதுவும் வரவில்லை.தமிழக நலனில் தி.மு.க., அரசுக்கு அக்கறை இருக்குமானால், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது, மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Laddoo
ஜன 07, 2025 13:11

ஜாதி வெறியை தூண்டி இவர் குடும்பத்தையும் வாரிசுகளையும் வளர்த்துக் கொண்டு விட்டார். இவருடைய ஊசிப்போன கொள்கைகளை இவருடைய வாரிசுகளே ஏற்றுக் கொள்வதில்லை.


jayvee
ஜன 07, 2025 11:06

ஜாதிவெறி பிடித்த நபர் ..தகுதி இல்லாமலா இவரும் இவர் பிள்ளையும் டாக்டர் பட்டம் பெற்றார்கள்


RAVINDRAN.G
ஜன 07, 2025 10:12

நாடு திருந்தினாலும் இவர் திருந்தமாட்டார். மணிக்கு ஒருமுறை தான் ஜாதிக்கட்சி என்று நிரூபிக்கிறார். சரியாதான் சொல்றாங்க இவர்கள் ஜாதி கட்சி என்று


ராமகிருஷ்ணன்
ஜன 07, 2025 09:59

உங்க ஜாதிகாரனே உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள், ஏன் இப்படி ஜாதி ஓட்டுக்காக அலையுறீங்க


GMM
ஜன 07, 2025 09:36

சாதி கணக்கெடுத்து என்ன செய்ய வேண்டும்.? அரசு எடுக்கும் முன் ராமதாஸ் தன் சாதி விவரம் வெளியிட முடியும். மதம் மாறியவர், கலப்பு திருமணம் , உட்பிரிவு எந்த சாதி. ? திராவிடம், காங்கிரஸ் சிறுபான்மை சலுகைகள் வாக்கு பெற சட்ட பிரிவுகள் / சலுகைகள் அதிகம் நுழைப்பு . திமுக, காங்கிரஸ் , பாட்டாளி போன்ற சாதி, மத கட்சிகள் வெற்றி பெற்றாலும் முதல்வர், பிரதமர், நிதி அமைச்சர், உள்த்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்க அந்த கட்சியை தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது. இந்தியாவில் நூற்றுகணக்கான பிரிவு மக்கள் சிறு குழுக்களாக வாழ்வதால், அதிக வாக்கு வெற்றியை தீர்மானிப்பது ஆபத்து. தமிழகத்தில் பல சிறிய பண்பட்ட சாதியை திராவிடம் அழித்து விட்டது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 08:55

மாநில அரசு எடுக்கும் சாதிவாரி கணக்கை, அதிகாரபூர்வ ஆவணமாக ஏற்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக அழுத்தமாக பதிவிட்டிருப்பதை இவருக்கு யாராச்சும் படிச்சு காட்டுங்கப்பா வரவர இந்த தொல்லை தாங்கமுடியவில்லை.


அப்பாவி
ஜன 07, 2025 08:04

ஜாதிய வெச்சே பொழப்பை ஓட்டுற ஒரு கும்பல்.


Bye Pass
ஜன 07, 2025 07:49

இஸ்லாமியர்களில் 47 பிரிவுகள்… கிறித்துவர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கல்லறை ..பொருளாதார அடிப்படையில் சலுகை வழங்கவேண்டும் ..சளி இருமலுக்கே அமேரிக்கா செல்லும் அரசியல்வாதிகளும் திரைப்பட கலைஞர்களும் இருக்கும் நாடு நமது ..


Kasimani Baskaran
ஜன 07, 2025 07:32

இடஒதுக்கீட்டை சரியாக அமல்படுத்தாமல் காங்கிரஸ் செய்த காமெடியில் பலர் இன்னும் கூட நசுக்கப்பட்டும், பிதுக்கப்பட்டும் இருக்கிறார்கள். நாடு முன்னேறவேண்டும் என்றால் தகுதியை குறைத்துக்கொள்ளக்கூடாது - ஆனால் தகுதியை பெற யாராருக்கு உதவி தேவைப்படுகிறதோ அதை முழுமனசுடன் அரசு செய்ய வேண்டும்.


PARTHASARATHI J S
ஜன 07, 2025 07:32

கிறல் விமுந்த ப்ளேட் மாதிரி சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த புத்தி கெட்ட மருத்துவருக்கு மக்களின் மனநிலை புரியல. இட ஒதுக்கீடே தேவையில்லை என்ற நிலைக்கு பாரதத்தை மோடி அழைத்து செல்கிறார். வன்னியர் மட்டும் தான் தமிழகத்தில் உள்ளனரா? வன்னியர்க்கு வேலை கொடுத்தாலும் குடிச்சிட்டு குப்பறப்படுத்தி விழுவான்.


முக்கிய வீடியோ