உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழையால் நிலச்சரிவு மூணாறு ரோட்டில் தடை

கனமழையால் நிலச்சரிவு மூணாறு ரோட்டில் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மூணாறு: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், 'கேப் ரோடு' வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு - போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, மூணாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மலையை குடைந்து பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் மழைக்காலங்களில் கேப் ரோட்டில் நிலச்சரிவு வழக்கமாகி விட்டது. மே 12ல், பெய்த மழையில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்து, போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்ததால், கேப் ரோடு வழியாக இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கு மண் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக அடுத்த உத்தரவு வரும் வரை போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதித்து, கலெக்டர் விக்னேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.அதனால் மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உட்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என, அவசர தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் கேப் ரோடு வழியாக அனுமதிக்கப்படுகிறது.மேலும், இடுக்கி மாவட்டத்தில், தடை விதிக்கப்பட்ட சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளை மீறுவோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.கனமழையால் வால்பாறை அருகே, வேவர்லி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு, 200 மீட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள ரோடில், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மே 31, 2025 06:41

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் மண்ணரிப்பை தடுக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி