உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளுடன் சதி திட்டம் தீட்டும் வக்கீல்கள் : நடவடிக்கை எடுக்க உத்தரவு

ரவுடிகளுடன் சதி திட்டம் தீட்டும் வக்கீல்கள் : நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை : 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளை சந்தித்து, வழக்கறிஞர்கள் சதி திட்டம் தீட்டுவது தெரியவந்தால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.அவர், கமிஷனர்கள், ஐ.ஜி., -- டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த ஜன. 1ல் இருந்து ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987 முறை சந்தித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும் 546 முறை சந்தித்துள்ளனர். வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன.குறிப்பாக சில வழக்கறிஞர்கள், கைதிகளை சந்தித்தபோது, சிறையில் உள்ள அலாரம், சந்தேக ஒலியை எழுப்பி உள்ளது. தொடர் கண்காணிப்பில், சில வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டுவது தெரிய வந்துள்ளது. நெருங்கிய உறவுசிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, அலைபேசி உள்ளிட்ட பொருட்களை, கைதிகளுக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது. சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாக பயன்படுத்துகின்றனர். குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்தி கொள்ளுதல், சிவில் விவகாரங்கள், சொத்து அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கைதிகளை சந்திக்க விரும்பும் வழக்கறிஞர்கள், அவர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களுடன், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.நடவடிக்கைஅவருக்கும் கைதிக்கும் இடையிலான, வழக்கு தொடர்பான விபரங்கள், சம்பந்தப்பட்ட கைதிக்கு, அவர் சட்ட ஆலோசகர்தான் என்பதற்கான ஆவணங்களை, சிறைத்துறை கண்காணிப் பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அவர் உரிய ஆவணங்களை சரிபார்த்து, கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிப்பார்.கைதிகளுடன் சேர்ந்து, சதி திட்டம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
அக் 18, 2024 17:59

உங்களுக்கு எதுக்கு சார் தேவையில்லாத அக்கறை? மனித உரிமை தீர்ப்பாயத்துக்கிட்டே உட்டுருங்க. அவிங்க ரவுடிகளை அன்போடு அரவணைத்து புத்தி சொல்லி திருத்துவாங்க.


GMM
அக் 18, 2024 10:05

போலீஸார் துணிவு பாராட்டிற்கு உரியது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ரவுடிகளுக்கு உதவும் வக்கீல்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு முன் கலெக்டர் நிர்வாக நடவடிக்கை அவசியம். மேலும் மாநில உள் துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதனை பொலிஸார் செயல் படுத்துவது எளிது. உயர் நீதிமன்ற மத்திய பாதுகாப்பு திரும்ப பெற வேண்டும். போலீஸார் அதிக பணியிடம் அரசு கல்லூரி, மருத்துவ மனை, வங்கி, கருவூலம்.. போன்ற முக்கிய பொது சொத்து மீது இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் பாதுகாப்பு கட்சி பொறுப்பு என்று மாற்ற வேண்டும்.


R.RAMACHANDRAN
அக் 18, 2024 07:49

வழக்கறிஞ்சர் தொழிலில் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை கோட்பாடுகளை வழக்கறிஞ்ர்கள் கடை பிடித்தால் இந்த நாட்டில் குற்றங்கள் செய்ய அஞ்சுவதன் மூலம் குற்றங்கள் குறையும்.


Lion Drsekar
அக் 18, 2024 07:34

இதே போன்று மற்ற நிலைகளில் இதைவிட அதிகமாக புரையோடிப் போன நிலைகளில் அவர்கள்மீதும் கூடவே இருந்து திரைப்படங்களில் வருவதுபோல் நடந்துகொள்ளும், நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும், உண்மையிலேயே இன்றைய செய்தி எல்லாமே பாராட்டும் வகையில் உள்ளது, செய்வது போல் நடந்தால் பாராட்டலாம், மக்களுக்கு பணியாற்ற முதற்படி வைத்ததற்கு பாராட்டுக்கள் இன்று இளைஞர்கள் மிக அதிக அளவில் சட்டப்படிப்புக்குதான் அலைமோதுகிறார்கள். காரணம் ஏதாவது ஒரு வழியில் நாட்டுக்கும் மக்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கத்தில், ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்துக்கொண்டு மற்றவர்கள் செயல்படுவதை பார்த்து, ஆஹா இவர்களே இப்படி செய்யும்போது நாம் ஏன் அவர்களைப்போல் செயல்படக்கூடாது என்று தூண்டும் அளவுக்கு மற்ற துறையினர்கள் ஒரு எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதால் வரும் நிலையே காரணம், வந்தே மாதரம்


Dharmavaan
அக் 18, 2024 08:37

இப்போது கண்டா தருதலைகளும் தன்னை வழக்கறிஞர் என்று சொல்லி கொள்கின்றன அந்த படிப்பு அவ்வளவு சுலபமாகிவிட்டது


Ms Mahadevan Mahadevan
அக் 18, 2024 06:32

எப்படி காவல் துறையில் கருப்பாடுகள் உள்ளதோ அதேபோல் வழக்கறிஞர்களும் பல கருப்பாடுகள் இருக்கிறார்கள். சமூகத்திற்கு அவர்களால் இடியுறுதான். கடும் நடவடிக்கை தேவை


Kasimani Baskaran
அக் 18, 2024 05:40

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களாக இருக்கும் தீம்க்காவினர் நீதிபதிகளையே கூட மிரட்டும் திறமை பெற்றவர்கள் - அவர்களுக்கு சிறை ஒரு பொருட்டே இல்லை. இவர்களில் சிலர் நீதிபதியாகி விட்டார்கள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 18, 2024 05:05

குற்றவாளிகளுக்கு உதவுபவர்களும் குற்றவாளிகளே என்கிறது சட்டம். வழக்கறிஞர்களே குற்றவாளிகளாக ஆவது இழிநிலை ...


J.V. Iyer
அக் 18, 2024 04:49

இது எல்லா ரவுடிகளுக்கும் பொருந்துமா? அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரவுடிகள், வக்கீல்களுக்கு மட்டுமா? ஏவல்துறையை நம்பமுடியாது.


rama adhavan
அக் 18, 2024 03:44

அதே போல் காவல் /சிறை துறையினருக்கு என்ன அறிவுரை /சுற்றறிக்கை விடுகிறீர்கள்? காவல் துறையினரையே மிரட்டி மண்டி இட வைக்கும் அரசியல் வாதிகளை மிரட்ட என்ன அறிவுரை?


சம்பா
அக் 18, 2024 03:38

குண்டா சுல போடு அல்லது எண்கவுண்டர்ல போடுதானே அடங்கும் இது குபோயி