உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் வேல்ஸ் சட்டப்பள்ளி விழாவில் நீதிபதி மகாதேவன் அறிவுரை

வழக்கை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் வேல்ஸ் சட்டப்பள்ளி விழாவில் நீதிபதி மகாதேவன் அறிவுரை

சென்னை:''நீதிமன்றத்திற்குள் நுழைந்ததும், வழக்கை ஒரு நிமிடத்தில் எப்படி எடுத்துக் கூறலாம் என கற்றுக்கொள்ள வேண் டும்,'' என, வேல்ஸ் சட்டப் பள்ளி விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் சட்டப் பள்ளியின் 10ம் ஆண்டு நிறைவு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. அதன் வேந்தர் ஐசரி கே.கணேஷ் வரவேற்றார். உயரிய நோக்கம் சிறப்பு விருந்தினராக, உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டீஷ்வர் சிங் பேசியதாவது: சட்டம் என்பது வெறுமனே பட்டம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவை பெறுவதே, சட்டக் கல்வியின் உயரிய நோக்கம். விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நிலைப்புத் தன்மை ஆகியவை இக்கால வழக்கறிஞர்களுக்கு தேவை. இந்திய அரசியல் சாசனம், அனைத்து பிரச்னைகளை தீர்ப்பதற்கான கருவூலமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முக்கியமான துறை உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசியதாவது: மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடைய வாழ்விலும், சட்டமும், நீதியும் அனைத்து விஷயங்களிலும் பங்கெடுக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் சட்டமும், நீதியும் பின்னி பிணைந்திருக்கிறது. கல்வி சார்ந்த துறைகளில், சட்டம் தான் முக்கியமான துறை. சட்டத் துறையை தேர்ந்தெடுக்கக் கூடியவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கணமும் இன்றியமையாதது. கிடைக்கக்கூடிய வாய்ப்பை எந்த விதத்தில் பயன்படுத்துகிறீர்களோ, அதை ஒட்டி தான் வாழ்க் கையின், வெற்றியின் முதல் படி அமைக்கப்படும். சட்டம் படிப்பதை கடந்து, அத்துறை சார்ந்த அறிவை எந்த விதத்தில் உருவாக்குகிறீர்களோ, அந்த விதத்தில் தான் வாழ்வின் அடுத்த கட்டம் நகரும். நீதிமன்றத்திற்குள் நுழைந்ததும், உங்கள் வழக்கை, ஒரு நிமிடத்தில் எப்படி எடுத்துக் கூறலாம் என கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான், வெற்றிகரமான வழக்கறிஞராக மாறுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார். Galleryவிழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல் குமார், இளந்திரையன், பரத சக்கரவர்த்தி, கலைமதி, 'வேல்ஸ்' குழுமங்களின் துணைத் தலைவர் பிரீதா கணேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், தமிழில் வழக்காடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 'புஷ்பா ஐசரி வேலன்' பெயரில் விருது, பரிசு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 21, 2025 03:19

வழக்கை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், வழக்கை ஐம்பது வருடம் நடத்துவோம். குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவும் இயற்கை மரணம் அடையவும் நாங்கள் உதவி செய்வோம். ஐந்து கட்சி அமாவாசை போன்ற ஊழல்பேர்வழிகளை மந்திரியாக தொடர வழிவகை செய்து கொடுப்போம். வங்கிக் கணக்கை உயர்த்திக் கொள்வோம். அம்புட்டுத்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை