உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி மாநாடு குறித்து தலைவர்கள் கருத்து

விஜய் கட்சி மாநாடு குறித்து தலைவர்கள் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா: விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை; குழப்பத்தில் இருக்கிறார். விஜய் தேசியவாதியா அல்லது பிரிவினைவாதியா என, தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; தி.மு.க.,வுக்கு தான் பாதிப்பு.தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க., என்பது ஆலமரம். 'காய்த்த மரமே கல்லடி படும்' என்பது பழமொழி. அதனால், விஜய் பேச்சு குறித்து கவலைப்படவில்லை. அவரின் பேச்சுக்கு, வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அதில், எந்தவித இடப்பெயர்ச்சியும் ஏற்பட வாய்ப்பில்லை.புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி: முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய்க்கு பாராட்டுக்கள். தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை விஜய் முன் வைத்து உள்ளார். புதிய தமிழகம் கட்சி துவங்கிய நாள் முதல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே, தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. அதுவே, தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு, ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க துவங்கி உள்ளன. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே, இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழகம் அரசியல் களம், புதிய பாதையை நோக்கி பயணப்படும்.துணை முதல்வர் உதயநிதி: மக்கள் யாரை ஏற்றுக் கொள்கின்றனர் என்பதும், கொள்கைகளும் முக்கியம். நீண்ட கால நண்பர் விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக அரசியலில் 'கருப்பு, சிவப்பு' என்பதில் இருந்து தற்போது சிவப்பு, மஞ்சளாக மாறி வருகிறது. என் கட்சிக் கொடியில் புலி உள்ளது. விஜய் கட்சிக் கொடியில் யானை உள்ளது. விஜயை பார்க்க கூட்டம் கூடும்; அது ஓட்டுகளாக மாறாது என்பதை விட்டு விடுங்கள். அதை மக்கள் தீர்மானிக்கட்டும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்: தற்போதே, தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளன. அக்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி பேச்சு நடத்துகிறார். நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
அக் 28, 2024 17:02

விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு என்பதை அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் சொல்லி விடுவார்கள். அதுவரை எல்லோரும் காற்றில் கம்பு சுற்றலாம்!


Sivagiri
அக் 28, 2024 12:44

அதான் நேத்தே சொல்லீட்டீங்களே, விசி - கம்யூனிஸ்டுகள் - அதோட உதிரிகள் எல்லாரையும் கழட்டி விட்டுட்டு, தவேக - வை பூஸ்ட் பண்ணி விட்டு, பின்னாடி சேத்துக்கலாம்னு - கணக்கு போட்டு காத்திருக்கு தீமுக-இவரும் இப்பவே சொல்லீட்டாரு - கூட்டணி வச்சிக்கலாம், ஆனால் மந்திரி ஆக்கணும்-னு - அப்போ துணை முதல்வருக்கு துணையா ஒரு இணை முதல்வர் வந்தாலும் வருவார் போல . . .


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 28, 2024 12:18

விஜய்க்கு வாழ்த்துக்கள். தமிழ் தேசியமும் திராவிடமும் இன்றைக்கு நேர் எதிரானவை. இரண்டும் இரு கண்களாக இருக்க வாய்ப்பில்லை. இதில் குழப்பம் உள்ளது. எனினும், எதிர்காலத்தில் விஜய் இதை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றபடி அவரது கருத்துக்களில் பெரிய விமர்ச்சனங்கள் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் வள்ளுவ பாட்டனின் வரிகளை மெய்ப்பித்தாலே அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும். மக்களாலும் நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்து அதை செய்து காட்டினால் மக்கள் அவரை ஏற்பார்கள். காலம் பதில் சொல்லும்.


Jay
அக் 28, 2024 11:52

சிந்தித்து ஓட்டு போடுபவர்கள் யோசிக்கும்படி விஜயின் பேச்சில் எதுவும் இல்லை. திமுக போன்று பிரிவினைவாதத்தை முழுவதும் கையில் எடுப்பது போன்று தெரியவில்லை. திமுக போன்று மக்களை குழப்பி ஆதாயம் பார்ப்பது மட்டும்தான் தெளிவாகத் தெரிகிறது. சிந்திக்காமல் தலைவன் என்று கொண்டாடும் ரசிகர்களுக்கு தேவையான விசியங்கள் பேச்சில் உள்ளன.


Pandianpillai Pandi
அக் 28, 2024 10:28

எல்லா கட்சியும் எனது எதிரி தி மு க தான் என்று முழக்கமிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி தி மு க. தி மு க சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தை போற்றியும், இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. தனது கட்சிக்காரரை தோழா என்று அழைத்தவர், மாநாட்டில் அவரது கட்சியின் சில தோழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மாநாட்டில் ஒரு இரங்கல் செய்தியோ அஞ்சலியோ செலுத்தாத ஒரு கட்சியின் தலைவர் என்ன மாற்றத்தை தந்து விட போகிறார்? இவரது வீரம் தான் என்ன? வாளினை மற்றும் தூக்கி பிடித்தால் வீரம் வந்துவிடுமா? தனது தோழர்களை பழிகாடானாலும் பரவாயில்லை அவர் அரியணை ஏறவேண்டும் எண்ணம் மட்டுமே பிரதானமாக தெரிகிறேதே .


sankaranarayanan
அக் 28, 2024 10:15

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க., என்பது ஆலமரம் என்றார் அந்த ஆலமரமும் புயலுக்கு அடிபணிந்து கீழே விழும் சுக்கு சுக்காக சிதரும் என்று நினைத்த்துக்கொள்ள வேண்டும் இதற்கு வெகுதூரம் காலம் இல்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர் விஜய் அவரிடம் பெரியாரின் மூட நம்பிக்கைகளுக்கு இடமே இல்லை


brittopharma
அக் 28, 2024 10:00

மக்கள் யாரை ஏற்றுக் கொள்கின்றனர் என்பதும், கொள்கைகளும் முக்கியம்.


angbu ganesh
அக் 28, 2024 09:41

அவருடைய பேச்சை தட்ச்செயலாக நேர்ந்தது எனக்கு அது வண்டு முருகன் பேச்சை கேற்பது போல இருந்துச்சு சாரி மத்தவங்களுக்கு எப்படியோ


R K Raman
அக் 28, 2024 08:24

புதிய டப்பாவில் பழைய சாராயம்... இருமொழி, திராவிடம், சாதி ஒழிப்பு ஆனால் சாதிவாரி கணக்கு/ஒதுக்கீடுகள், போதை ஒழிப்பு என்று பொத்தாம் பொதுவாக... மொத்தத்தில் தி மு க எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து மீண்டும் மீண்டும் விடியல் ஆட்சி வர நல்ல வாய்ப்பு தெரிகிறது...


தமிழன்
அக் 28, 2024 08:15

விஜயால் அரசியலில் வெற்றி பெற முடியாது. குழந்தை பாம்பை பிடித்து விளையாடலாம். ஆனால், குழந்தை என ? பாம்பு சும்மா விடாது. ஜோதிட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் குழப்பமான சூழலில் அரசியல் கடலில் நீந்தும் விஜய், அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. மாநாடு தொடங்கிய நேரம் யோகம் சரியில்லை. சிம்ம ராசி என நாளை தேர்வு செய்து இருந்தால் கூட அரசியலுக்கான நட்சத்திர யோகம் இல்லை. விஜயகாந்த் மாநாட்டில் கூட இதை தான் சொல்லி இருந்தேன்.. இது தான் எதார்த்தமான ஜோதிட பார்வை. காய்தல் உவத்தல் இல்லாமல் சொன்னது இவரை பிடிக்கும் பிடிக்காது என்பது அல்ல. ஒரு மருத்துவர் எதிர் கட்சி ஆளும் கட்சி என பார்க்காமல் நோயாளிகள் என பார்ப்பது போல ஜோதிட ரீதியான கருத்தே தவிர விருப்பு வெறுப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை