உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதானி மீது சட்டபூர்வமான நடவடிக்கை; திருமாவளவன் வலியுறுத்தல்

அதானி மீது சட்டபூர்வமான நடவடிக்கை; திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: அதானி மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.சென்னையில், நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அதானியை பற்றி ஏற்கனவே, ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. பங்கு சந்தையில் அவர் எப்படி, ஊழல் திமிங்கலமாக இருக்கிறார் என்பதை கடந்தாண்டு ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியதை நாம் அறிவோம். அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியது. ஆனால் மோடி அரசு அதானி அரசாகவே இயங்கி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8mbl3r6y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பங்குசந்தை ஊழல்

பார்லிமென்டில் அதானி பற்றி, பேசினாலே ஆளுங்கட்சி தரப்பில் கொந்தளிக்கிறார்கள். அவரை பற்றி ஏதாவது பேசினால், அதை அவை குறிப்பில் இருந்து நீக்க கூடிய அளவுக்கு, ஆத்திரப் படுகிறார்கள். இன்று உலக அளவில், இந்த தேசம் தலை குனிய கூடிய, ஒரு பங்குசந்தை ஊழலில், அதானி ஈடுபட்டு இருப்பது வெட்ககேடானது. ராகுல் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வி.சி.க.,வும் அதானி மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
நவ 22, 2024 23:05

உங்களுக்கு தைரியமிருந்தால் முதலில் தமிழக ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள் பார்க்கலாம். முதலில் முன்னாடி இருக்கிற திருடனை பிடிக்க முயலுங்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 22, 2024 21:12

அது எப்படிங்க இப்படி ஒரு போட்டோ ? அந்த அண்ணாசாலையில் பிரியாணி கடையில் ஒரு பார்சல் ஆர்டர் போட்டுடுங்க , இது அமைதியாயிடும்


Subramanian N
நவ 22, 2024 20:22

நீங்க எல்லாம் ஒரு அரசியல் தலைவர்


sankaranarayanan
நவ 22, 2024 18:35

அதானி மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்துகிறாரே இவருக்கு முழு கதையும் தெரியுமா சும்மா எல்லோரையும்பொன்று ஒரு சத்தம் போடலாம் என்று கூறக்கூடாது மவுனமாக இருக்க வேண்டும் உங்கள் கூட்டாட்சி தலைவர் முதல்வர்தான் அதானியாய் தனியாக அழித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரம் பற்றி பேசியுள்ளார் ஆனால் அது வெளிவரவில்லை அதானியை முழுக்க முழுக்க ஆதரிப்பது உங்கள் தலைவர்தான் அவரிடம் சொல்லுங்கள்


Murugesan
நவ 22, 2024 17:35

உன்னைவிட கேவலமான திருடன் உலகிலே கிடையாது ,தமிழகத்தின் சாபக்கேடு திமுக,அவனுங்க கூட்டாளிகளான அனைத்து சைத்தான்களும்


Rajan
நவ 22, 2024 16:13

லாட்டரி ரெய்டு எதிரொலி


M Ramachandran
நவ 22, 2024 16:07

பார்த்து பேசுங்ங் சீமான். ஸ் டாலினிடம் permission வாஙகி விட்டீர்களா


pandit
நவ 22, 2024 15:53

அவன் லஞ்சம் கொடுத்தது தி மு க மந்திரிக்கு என்று அமெரிக்கா சொல்லுவது இவனுக்கு புரியவில்லையா


N Sasikumar Yadhav
நவ 22, 2024 14:45

சொந்த நாட்டிற்கு எதிராக இருக்கும் திருமாவளவன் போன்றவர்களை கைதுசெய்ய வேண்டும் .


சம்பா
நவ 22, 2024 13:53

நீயெல்லாம். ஒரு - ?


சமீபத்திய செய்தி