கிருஷ்ணகிரியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை, அடவி சாமிபுரம் கிராமத்தில் வனத்துறையின் கூண்டில் சிக்கியது.கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர் வெங்கடாபுரம், குல்நகர், அதியமான்நகர், பாஞ்சாலியூர், கொண்டே பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்நடைகளை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வந்தது. இதுவரையில் 30க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொன்றுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w9qbbcai&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், பீதியடைந்த பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனத்துறையினர் சி.சி.டி.வி., கேமராக்களை வைத்து ஆய்வு செய்தபோது, சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது பதிவாகி இருந்தது.இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர். மேலும், பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். இந்த நிலையில், அடவி சாமிபுரம் கிராமத்தில் வனத்துறையின் கூண்டில் சிக்கியது. இதனால், கிருஷ்ணகிரி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.