உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணிப்பூரில் அமைதி நிலைநாட்டிவிட்டு பின் தமிழகம் வரட்டும்: சேகர்பாபு

மணிப்பூரில் அமைதி நிலைநாட்டிவிட்டு பின் தமிழகம் வரட்டும்: சேகர்பாபு

சென்னை : சென்னையில், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அங்கலாய்த்து இருக்கிறார். அவர், அடுத்தவர் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று சொல்வதற்கு முன், தன்னுடைய முதுகில் இருக்கும் அழுக்கைப் பார்க்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் என்ன நிலை என்பதைப் பார்த்துவிட்டு, தமிழகம் குறித்து குறை சொல்ல வேண்டும். அதற்காக, குழந்தை திருமணத்தை தி.மு.க.,வோ, தமிழக அரசோ ஆதரிக்கவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் அரசாலும், அரசு அதிகாரிகளாலும் ஏற்படுத்தப்படுகிறது. மீறி நடக்கும் திருமணங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் கொஞ்ச காலம் ஓய்ந்திருந்த கலவரம், மீண்டும் துவங்கி இருக்கிறது. சொல்லப் போனால், கலவரம் தொடருகிறது. அங்கே, மத்திய அரசும் பா.ஜ.,வும் என்ன செய்து கொண்டிருக்கிறது? இதேபோல பா.ஜ., ஆளும் பல மாநிலங்களிலும் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் எவ்வித புகார் வந்தாலும், அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுபவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின். அப்படியொரு முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது. கொலை நகரமான மணிப்பூருக்குச் சென்று, அங்கு அமைதியை நிலைநாட்டிவிட்டு வந்து, தமிழகத்தை கொலை நகரம் என அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.,வினர் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

S.kausalya
ஜூன் 11, 2025 12:17

நாங்க தமிழ் நாட்டில இருக்கோம். இங்க தான் எல்லா வரியும் கட்டறோம். எவ்வளவு உயர்த்தினாலும் ஒழுங்கா வரி செலுத்தி விடுகிறோம் . அப்புறம் நாங்க எதுக்கு மணிப்பூரை பார்க்கணும்? அங்க நடப்பது குறி்த்து வேதனை அடைகிறோம். அவ்வளவு தான். அமெரிக்காவை பாரு ரஷ்யாவை பாரு எல்லாம் வேண்டாமே எங்களுக்கு. இங்கே நாங்கள் கஷ்டம்னு இல்லாமல் வாழவகை செய்ய வேண்டியது உன்னுடைய அரசு. அதை தான் எதிர்பார்க்கிறோம் .


நிவேதா
ஜூன் 11, 2025 11:30

தமிழகத்தை கொலை நகரம் இல்லை என நிரூபித்து விட்டு மணிப்பூர் பத்தி பேசுங்க


Dharmavaan
ஜூன் 11, 2025 08:49

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி .ஆல மரமாய் வளர்ந்து விட்டபின் வெட்டுவது கடினமே தமிழ் நாடு மணிப்பூர் ஆகாமல் தடுக்கவே அமித் ஷா நோக்கம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 07:51

மணிப்பூருக்கு அடுத்தபடி படு அமைதியா, பாலியல் வன்முறைகள,, கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள், போதை புழக்கம், சங்கிலி பறிப்பு என எதுவுமற்ற அமைதியான இடம் தமிழகம்...ஓகேவா ..இருநூறு ரூபாய் கனிபார்ம் ...


VENKATASUBRAMANIAN
ஜூன் 11, 2025 07:09

ஏம்பா சேகர் தமிழ்நாட்டை பற்றி பேசினால் மணிப்பூருக்கு ஓடுகிறாய்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 06:50

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லமுடியுமா? தமிழ் நாட்டை ஆள்வது நீங்கள் ..அவர் யாரிடம் கொடுப்பார் .. 2026 அண்ணாமலையே சட்டம் ஒழுங்கை சரிசெய்வார்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 06:48

முதலில் உக்ரைனில் அமைதிநிலவட்டும், சிரியாவில் அமைதி நிலவட்டும் ,பாகிஸ்தானில் அமைதி நிலவட்டும் , பங்களாதேஷில் அமைதி நிலவட்டும் , மியான்மரில் , இலங்கையில் அமைதி நிலவட்டும் பிறகு தமிழ் நாட்டில் அமைதி நிலவும் ..என்று ஒரே போடாய் போடவேண்டியதுதானே ...


Mecca Shivan
ஜூன் 11, 2025 06:41

மணிப்பூரிலும் அல்லுலேயர்களால்தான் பிரச்சனை


Mani . V
ஜூன் 11, 2025 05:45

ஏன் சேகர் அதுவரைக்கும் நீங்கள் தமிழகத்தை விட்டு வைத்து இருப்பீர்களா? கொள்ளையடித்து முடித்து விட்டு, "கருணாநாடு" என்று பெயர் சூட்டி விட்டு அனைவரும் எஸ்கேப் ஆகி விடுவீர்கள்.


srinivasan
ஜூன் 11, 2025 03:45

நீங்கள் முதலில் வேங்கை வயல் விவகாரத்தை முடித்து விட்டு பிறகு சமூக நீதி பேசுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை