உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம்: ஹிந்து மகா சபை சூளுரை

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம்: ஹிந்து மகா சபை சூளுரை

உளுந்துார்பேட்டை: 'திருப்பரங்குன்றத்தில் தைப்பூச நாளில் தீபம் ஏற்றியே தீருவோம்' என, அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவர் பெரி.செந்தில் சூளுரைத்துள்ளார். அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள பெரி.செந்திலுக்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது எல்லை அளவைக்கல் கிடையாது. முந்தைய காலங்களில் தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்ட தீபத்துாண் தான் அது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற முடியாவிட்டாலும், தைப்பூச நாளில் தீபம் ஏற்றியே தீருவோம்; இது உறுதி. வரும் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் பிரச்னை என்றால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். அதேபோல், ஹிந்துக் களும் தங்களுடைய பிரச்னைகளை களையவும், உரிமைகளை நிலை நாட்டவும் ஒன்றிணைய வேண்டும். ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள கோவில் நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karthikeyan
டிச 11, 2025 14:44

நாம இப்படியே தான் கத்திகிட்டே இருப்போம்...என்னிக்கு மற்ற மதத்தினர் மாறி ஒரு பயத்தை உண்டு பண்ணப்போறோம் ? நாம் பேச்சை விட்டு செயலில் நேரடியாக இறங்க வேண்டும்.


Raj Kamal
டிச 11, 2025 14:41

போய் பொழைக்கிற வழியை பாருங்கள். இவனுங்க பின்னால் சுற்றினால் கோர்ட் கேஸாகி, இருக்குற பொழப்பும் நாறிப்போய்விடும். இங்க கமெண்ட் போடுற எவனும் வந்து காப்பாத்த மாட்டான். சும்மா உணர்ச்சியை தூண்டி பிஜேபியும் அதன் கூட்டாளிகளும் குளிர் காய பார்க்கின்றனர். உஷாரய்யா உஷாரு இது பிஜேபிக்கு மட்டுமல்ல, எந்த கட்சி கூட்டத்துக்கு கூப்பிட்டாலும் மேல் சொன்னவற்றை நினைவில் வைத்து சூதனமாக நடந்துகொள்ளவும்.


Yasararafath
டிச 11, 2025 12:46

அனுமதி கொடுத்தா தானே தீபம் ஏற்ற முடியும்.?


பாலாஜி
டிச 11, 2025 10:41

வேலை எதுவும் இல்லாமல் இருப்பவன்கள் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றாமல் வாழுகிறான்கள்.


Ram
டிச 11, 2025 07:27

மினாரிட்டிகள் சேர்ந்து இந்துக்களை கபளீகரம் செய்துவருகிறார்கள், இவர்களால் நம் குழந்தைகளுக்கு நியாயமாக சேரவேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை இந்திய இறையாண்மைக்கு எதிராக மினாரிட்டிகளுக்கு வழங்கப்பட இடவொதுக்கீட்டின் மூலம் பறிபோய் இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை