உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூடல்; முதல்வர் அறிவித்த 3.0 திட்டம் கிடையாது

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூடல்; முதல்வர் அறிவித்த 3.0 திட்டம் கிடையாது

கிராமங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம், வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.தமிழக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, புதிய தொழில் துவங்குவதற்காக, நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை குறைக்க, கிராமங்களில் தொழில்முனைவோரை உருவாக்கவும் ஊக்குவிக்கவும், இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.இதில், மாநில அளவில் 64 பேர்; மாவட்ட அளவில் 230; வட்டார அளவில் 355; ஊராட்சி அளவில் 3,994 என, 4,623 பேர் பணியாற்றி வருகின்றனர். உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.அதனால், 'வாழ்ந்து காட்டுவோம் 3.0 விரைவில் செயல்படுத்தப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அதற்கான எவ்வித செயல் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, சிறப்பு செயலாக்கத் துறை செயலர் ஸ்ரேயா பி.சிங், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இதன் வாயிலாக, இத்திட்டம் முடிவுக்கு வருவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தில், 1.06 லட்சம் பேர் தொழில்முனைவோர்களாக்கப்பட்டு, வங்கி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. 5,000 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 3.08 லட்சம் விவசாயிகள், உரம், விதை, இயந்திரங்களுக்கு மானியம் பெற்றுள்ளனர். அத்துடன், 1,000 தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 15,926 பேருக்கு, தையல், எல்.இ.டி., பல்பு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக, இத்திட்ட பணியாளர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:56

கூவம் வீராணம் திட்டங்களின் வழியில் அடுத்த மூடுவிழா.


sankaranarayanan
ஜூன் 25, 2025 13:34

வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இதுபேன்ற தினம் ஒரு திட்டம் வகுக்கப்பட்டு வெளிவருகின்றன திட்டங்கள் சொல்லி மாளாது ஆனால் மறுநாளே அவைகள் எங்கு இருக்கிறதோ என்று இவருக்கே தெரியாது திட்டம் போட்டு திட்டிக்கொண்டு அழைக்கின்றது ஒரு கட்சி


M Ramachandran
ஜூன் 25, 2025 12:51

உங்கள் வாழ்ககையை முன்னுதாரமாக காட்டாதீர்கள். வாலிபர்கள் தவறான பாதைக்கு சென்று விடுவார்கள்.


lana
ஜூன் 25, 2025 11:47

அடுத்து தமிழ்நாடு மூடப்படும்.


Yasararafath
ஜூன் 25, 2025 10:49

அடுத்து 4.0 திட்டம்


madhesh varan
ஜூன் 25, 2025 10:38

பெட்ரோல் பேங்க்ல வேலை செஞ்சவன், இன்னைக்கு உலக பணக்காரன் ரிலையன்ஸ் ஆனது எப்படி


Rajah
ஜூன் 25, 2025 09:40

ஒருவேளை சோற்றிக்கு வழியில்லாமல் தமிழகம் வந்து இன்று ஆசியாவின் செல்வந்தர்கள் ஆகி வாழ்ந்துதான் காட்டியிருக்கின்ரீர்கள்.


G Mahalingam
ஜூன் 25, 2025 08:24

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான் இந்த வெட்கம் கெட்ட திராவிட மாடல் ஆட்சி. மத்திய அரசுக்கு ஏட்டிக்கு போட்டியாக வந்து பிறகு மண்ணை திமுக கவ்வுகிறது மோடி மருந்தகத்திற்கு போட்டியாக முதல்வர் மருந்தகம் வந்தது கூடிய விரைவில் மூடி விடுவார்கள். தமிழக புதிய கல்வி கொள்கை வரும் ஆனா வாராது. இரண்டு வருடமாக தூங்கி கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் பல திட்டங்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வல்லுனர் குழு அமைத்து நடுநிலையாக செயல் படுத்த படுகிறது. ஆனால் திராவிட மாடல் அரசு திமுக விசுவாசிகளை வைத்து திட்டம் கொண்டு வருகிறது. இந்த திட்டம் சரிவராது என்று ஸ்டாலின் சொல்ல பயம். கடைசியில் மக்கள் வரிபணம் பாதி வீணாகிறது. பாதி கொள்ளை அடிக்க படுகிறது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 25, 2025 07:29

கழக ஆட்சியிலும் வாழ்த்து காட்டுவோம்


BALA MURUGAN K
ஜூன் 25, 2025 07:02

இந்த திட்டம் மோடி அரசின் விஸ்வகர்மா திட்டம்.....பெயரை மாற்றி பேரு எடுக்க நினைக்கும் கேவலமான ஒரு செயல் இது.... உலக வங்கி கடன் கொடுப்பது இந்தியாவிற்காக .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை