உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மருத்துவ படிப்பில் 48 இடங்கள் காலி நிரப்ப அவகாசம் கேட்டு கடிதம்

 மருத்துவ படிப்பில் 48 இடங்கள் காலி நிரப்ப அவகாசம் கேட்டு கடிதம்

சென்னை: தமிழகத்தில் நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்தும், மருத்துவ கல்லுாரிகளில், 48 இடங்கள் நிரம்பாததால், அப்பணியிடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,600 எம்.பி.பி.எஸ்., மற்றும் 1,583 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 1,736 எம்.பி.பி.எஸ்., 530 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 72,194 பேர் தரவரிசை பட்டியலில் தகுதி பெற்றனர். இதில், 7.5 சதவீத ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி கவுன்சிலிங் நடத்தப்பட்டது. பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நடந்தது. இறுதி சுற்று கவுன்சிலிங் முடிந்த நிலையில், 48 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கு, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம், அவகாசம் கோரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலர் லோகநாயகி கூறியதாவது: சென்னை மற்றும் கடலுார் அரசு மருத்துவ பல் மருத்துவ கல்லுாரிகளில், மூன்று பி.டி.எஸ்., இடங்கள் உட்பட, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என, 48 இடங்கள் காலியாக உள்ளன. அதில், அரசு பள்ளி மாணவர் களுக்கான ஒதுக்கீட்டில், ஒரு பி.டி.எஸ்., இடமும் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கு, என்.எம்.சி.,யிடம் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை