உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஆவணங்கள் வாயிலாக கடன்: வங்கி அதிகாரிகள் உட்பட மூவருக்கு சிறை

போலி ஆவணங்கள் வாயிலாக கடன்: வங்கி அதிகாரிகள் உட்பட மூவருக்கு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக, பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், வங்கி அதிகாரிகள் உட்பட மூவருக்கு, தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில், ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன்.மோசடி இவர், தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர். 1988 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில், பல கோடி ரூபாய் கடன் பெற்றது.போலி ஆவணங்கள் வாயிலாக, இந்த கடன்களை பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில், மோசடி நடந்தது உண்மை என தெரியவந்தது.வங்கி அதிகாரிகள், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தங்கள் அதிகார வரம்பை விடவும், உத்தரவாதமாக அளித்த ஆவணங்களின் மதிப்பை விடவும், அதிகளவில் கடன் பெற அனுமதித்திருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் என ஒன்பது பேர் மீது, 1996ம் ஆண்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.சென்னையில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஒன்பது பேர் மீதும், 2000ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது; 2003ல், வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.28 ஆண்டுகள் இதையடுத்து, உயிரிழந்த நான்கு பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை, சென்னை 11வது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி வடிவேலு முன் நடந்தது.விசாரித்த நீதிபதி, வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு, தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 1.10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.கடந்த, 28 ஆண்டுகளாக நடந்த வழக்கில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
ஆக 29, 2025 05:24

Unlucky பா....ஸ்


Barakat Ali
ஆக 28, 2025 08:40

பெரும்பணம்/அதிகாரமுள்ள பதவி அல்லது இரண்டும் இருந்தால் சட்டம் அவ்வளவு எளிதாகத் தொட்டுவிட முடியாது ..........


சந்திரன்
ஆக 28, 2025 07:21

வழக்கு முடிக்க இத்தனை ஆண்டுகளா அடபாவிகளா மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் போகுது. அதுசரி கணம் நீதிபதி ஐயா பல கோடி வாங்கியவனுக்கு சில ஆயிரம் அபராதமா. கடன் வாங்கியவன் கொடுத்தவன் இரு தரப்பும் செத்தே போயாச்சு. நீங்கள் தான் ஜனாதிபதி கவர்னருக்கு காலகெடு விதிக்கிறீங்க என்னத்த சொல்ல


Natarajan Ramanathan
ஆக 28, 2025 05:32

33 ஆண்டுகள் முன்பாக பலகோடி கடன் வாங்கி வங்கியை ஏமாற்றிய வழக்கில் கடன் வாங்கியவனும் கடன் கொடுத்தவனும் இறந்தே விட்டார்கள். கூட பணிசெய்த வங்கி அலுவலர்களுக்கு இப்போது மூன்று லட்சம் அபராதம் விதிப்பதால் என்ன பிரயோஜனம்? இந்த வழக்கை விசாரித்த தண்ட அநீதிபதிகளுக்கு சம்பளமாகவே பலகோடி ரூபாய் வீணாகி இருக்கும்.


Mani . V
ஆக 28, 2025 05:29

அப்பா வழியில் அதிகாரிகள்.


Kasimani Baskaran
ஆக 28, 2025 03:57

கீழ் கோர்ட் தீர்ப்பு. இன்னும் அப்பீல் என்று இழுத்தடித்தால் 50 ஆண்டுகளாவது ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை