உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவ., 1ல் உள்ளாட்சி தினம் கிராம சபை ஒத்திவைப்பு

நவ., 1ல் உள்ளாட்சி தினம் கிராம சபை ஒத்திவைப்பு

தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நவம்பர், 1ல் நடக்கவிருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைத்து, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி, 26, உலக தண்ணீர் தினமான மார்ச் 22, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினமான ஆக., 15, காந்தி ஜெயந்தியான அக்., 2, உள்ளாட்சிகள் தினமான நவம்பர், 1 என, மொத்தம் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் மார்ச் 22, மே 1ல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நவம்பர், 1ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவ., 1ம் தேதியை விடுமுறையாக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர். அதை ஏற்று கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைத்து, அதற்கான தேதி பின் அறிவிக்கப்படும் என, ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை