உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது:" - முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்

" எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது:" - முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணர துவங்கி விட்டதாகவும், சிலரை சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'லோக்நிடி சி.எஸ்.டி.எஸ்' என்ற ஆய்வு அமைப்பு, 2024 லோக்சபா தேர்தலில் முக்கியப் பிரச்னைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை தான் முக்கியப் பிரச்னை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்னை என்றும் கூறியுள்ளனர்.

பா.ஜ., ஆட்சி படுதோல்வி

இதில் இருந்தே இந்த பா.ஜ., ஆட்சியின் முடிவுக்கான 'கவுன்ட் டவுன்' ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். 'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

என்றும் இந்தியன்
ஏப் 15, 2024 16:49

CGST, SGAST, UGST, IGST என்று நாலுவகைப்படும் அதில் முதலாவது மத்திய அரசுக்கு இரண்டாவது மாநில அரசிற்கு மூன்றாவது யூனியன் பிரதேசத்திற்கு நான்காவது மத்திய + மாநில அரசுகளுக்கு சென்றடையும் அப்போ வழிப்பறி மாநிலஅரசும் செய்கிறது


S.V.Srinivasan
ஏப் 15, 2024 10:28

நீங்கள் சொன்ன இந்த வார்த்தை உங்களுக்கும் பொருந்துமா முக்கிய மந்திரி அவர்களே


Sainathan Veeraraghavan
ஏப் 14, 2024 14:57

Pot calling kettle black


Barakat Ali
ஏப் 14, 2024 10:22

யாரும் கோபப்படாதீங்க அவருக்கு அவரே சொல்லிக்கிறாரு


S.V.Srinivasan
ஏப் 15, 2024 10:29

நூறு சதவிகிதம் உண்மை


kumarkv
ஏப் 14, 2024 02:36

உனக்கு புரிந்ததால் சரி


Gokul Krishnan
ஏப் 13, 2024 18:55

வந்துட்டான் அரிச்சந்திரன் மகன்


sundar
ஏப் 13, 2024 09:01

He is speaking about his government achievement


LakshmiNarasimhan KS
ஏப் 13, 2024 07:21

நாங்களும் சொல்லரும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்


Rajasekar Jayaraman
ஏப் 13, 2024 06:48

முந்திக் கொண்டு செய்தியை தருவது கொள்ளை கூட்ட திராவிடம்.


vijai seshan
ஏப் 12, 2024 22:43

கரெக்ட் மிஸ்டர் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த முறை உங்களின் நம்பி யாரும் ஏமாற மாட்டார்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ