உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் துரோகி என மக்களுக்கு தெரியும்: இ.பி.எஸ்.,க்கு அன்புமணி பதிலடி

யார் துரோகி என மக்களுக்கு தெரியும்: இ.பி.எஸ்.,க்கு அன்புமணி பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: யார் துரோகி என்பது மக்களுக்கு தெரியும் என இ.பி.எஸ்.,க்கு பா.ம.க., தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார்.கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது: நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. 2 கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தது போதும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டை அரைகுறையாக இ.பி.எஸ்., கொடுத்தார். வன்னியர் இட ஒதுக்கீடு கொடுத்தால் கூட்டணிக்கு தயார் என்று அதிமுகவிடம் கூறினோம்.நாங்கள் உழைப்பாளிகள், எங்களை நம்பி வந்தவர்களுக்கு நாங்கள் உயிரை கொடுப்போம். வெற்றி பெற வைப்போம். இ.பி.எஸ் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் ஒரு பக்கம் குடியையும், போதையையும் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவர்கள் ஆட்டத்தை ஆடுகின்றனர். மதுவை கொடுத்து 3 தலைமுறை இளைஞர்களை சிதைத்து விட்டனர். போலீசாரை சுதந்திரமாக செயல்பட விட்டால் சிறப்பாக செயல்படுவார்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mani . V
ஏப் 05, 2024 13:58

பெட்டி வாங்கும் நாங்களா துரோகிகள்?


muthu Rajendran
ஏப் 05, 2024 13:43

பத்தரை சதவீதத்தை கடைசி நேரத்தில் துண்டை போட்டு வாங்கினீங்களே இப்போ அவரை விட்டு வேறு கூட்டணியில் சேருவது சரியா


katharika viyabari
ஏப் 05, 2024 13:08

2௦௦ உபீசை உளரவைத்த அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்


விவசாயி
ஏப் 05, 2024 10:01

இந்த வருடம் தமிழ்நாட்டில் அவ்வளவாக மாங்காய் விளைச்சல் இல்லைனு பேசிக்கிறாங்க! ? நான் நிஜமான மாங்காயை சொன்னேன் ?


தமிழ்
ஏப் 05, 2024 08:56

ராஜ்யசபா சீட் கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றதும் eps துரோகி ஆகிவிட்டாரா.அப்போ எதுக்கு அதிமுகவிடம் தேர்தல் கூட்டணி பேசினீர்கள்.


Bala
ஏப் 05, 2024 08:54

எடப்பாடி பெரிய துரோகி


Nalla
ஏப் 05, 2024 08:12

இந்த வருடம் பச்சோந்தி ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என்றல் பா ம க வுக்கு கொடுக்கலாம்


குமரி குருவி
ஏப் 05, 2024 07:12

அரசியல் வாதிகள் யோக்கிய சிகாமணி கள் அல்ல ஆனால் துரோகம் பார்த்தால் எடப்பாடி தான் உச்சம் தொட்டவர்..


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ