உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகனே வினை தீர்ப்பவனே; வீடு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகனே வினை தீர்ப்பவனே; வீடு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

மதுரை: கோயில் மற்றும் வீடுகளில் இன்று (ஆக.,27) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு விநாயகருக்கு உண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் இறைவன் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் இவரே. வீதியெங்கும் சிறியது முதல் பெரியது வரை இவருக்குத் தான் கோயில் இருக்கும். சின்ன கிராமமாக இருந்தாலும் குளக்கரையில் குடியிருப்பார். மழையையும், வெயிலையும் ஒரு பொருட்டாக நினைக்காமல் வெட்ட வெளியில் ஹாயாக காட்சி தருபவர். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று எங்கு கிளம்பினாலும் செல்லும் வழியில் பிள்ளையாரைத் தரிசிக்காமல் செல்ல முடியாது. அது மட்டுமல்ல! இரண்டு அருகம்புல் அல்லது யாருமே பயன்படுத்தாத எருக்கம்பூவில் நான்கை அவர் மீது தூவி விட்டால் போதும். மனம் குளிர்ந்து போவார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mvquesd7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட்ட மனைப்பலகையில் விநாயகர் சிலைகளை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைத்தனர். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அருகம்புல் மாலை அணிவித்து, விளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர். மதுரை மற்றும் அனைத்து கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rathna
ஆக 27, 2025 19:21

அகரம், உகரம், மகரம் - அ உ ம - என்ற எழுத்துக்களின் கூட்டு - ஓம் என்னும் பிரணவ சொல். இதுவே உலக ஆரம்பத்தில் ஒலியாக இருந்ததாக கூறுவர். மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரம் இதுவே. இதற்கு அதிபதி பிள்ளையார் என்னும் கணபதி. பார்வதி தேவியின் உடலில் இருந்த மஞ்சளினால் உண்டானவர். சிவ பெருமானின் கணங்களில் தலைவர். குழந்தையான பிள்ளையாரை சமாதானப்படுத்தவும் கோபத்தை தணிக்கவும் திருமால் தோப்புக்கரணம் இட்டார். இது யோகத்தின் ஒரு முக்கிய அம்சம். ரத்த மண்டலத்தை மற்றும் மூளை செயல்பட அதிகரிக்க போடப்படும் ஒரு யோககரணி இது. புத்திக்கு பிரதானமானவர். கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதி. அகஸ்தியருக்கு ஞானம் அளித்தவர். தமிழ்நாட்டில் ஒவையாருக்கு ஞானத்தை அளித்தவர். குண்டலி சக்தியையும், பிரணவ தத்துவத்தையும் உபதேசித்தவர். தமிழ்நாட்டு 18 சித்தர்களில் ஒருவரான கும்பை சித்தருக்கு உபதேசம் செய்தவர். அவர் மாயவரம் சிவன் கோவில் பிள்ளையார் சன்னதியில் சித்தி அடைந்தார்.


Karthik
ஆக 27, 2025 18:50

தினமலர் வாசகர்கள், தொழிலாளிகள், அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி