உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடு வழக்கில் லாட்டரி மார்ட்டினுக்கு... சிக்கல்

முறைகேடு வழக்கில் லாட்டரி மார்ட்டினுக்கு... சிக்கல்

சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த கீழ் கோர்ட் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது; வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளது.சென்னை நங்கநல்லுார் தில்லைகங்கா நகரில், நாகராஜன் என்பவரது வீட்டில், 2012 மார்ச்சில் சோதனை நடந்தது. அதில், 7.20 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியது. கேரளா, மஹாராஷ்டிரா லாட்டரி சீட்டுகளை விற்றதன் வாயிலாக, அந்த பணம் வந்ததாக நாகராஜன் கூறினார். லாட்டரி சீட்டுகளை, தன் பங்குதாரர்களான மார்ட்டின், மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து வெளிமாநிலங்களில் அச்சிட்டதாகவும் தெரிவித்தார். மூன்று பேர் மீதும் மோசடி, சதி உள்ளிட்ட பிரிவுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமின் கேட்டு மார்ட்டின் மனு போட்டார். அதில், விற்பனை ஒப்பந்த பத்திரம் ஒன்றை இணைத்திருந்தார். அண்ணா நகரில், 12.30 கோடி ரூபாய்க்கு வீடு வாங்க, அட்வான்சாக 7.30 கோடியை மூர்த்தியிடம் தன் மனைவி லீமா ரோஸ் கொடுத்ததாகவும், அதுதான் நாகராஜன் வீட்டில் இருந்ததாகவும் மார்ட்டின் கூறினார். ஆனால், ஒப்பந்த பத்திர முத்திரைத்தாள் மார்ச் 13ல் தான் விற்கப்பட்டுள்ளது; ஒப்பந்தம் மார்ச் 2ல் கையெழுத்தாகி உள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மூர்த்தியும், லீமா ரோசும் ஆவணங்களை திருத்தி மோசடி செய்ததாக கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மார்ட்டின் மனைவி லீமா ரோசும் வழக்கில் சேர்க்கப்பட்டார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது; விசாரணை தொடர்ந்தது.திடீரென, வழக்கை முடித்து வைக்குமாறு கேட்டு, 2022 நவம்பரில் ஆலந்துார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதை ஏற்று, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார். அதிர்ச்சியான அமலாக்க துறை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் விசாரித்தனர். அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ''குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக கூறிய போலீசார், திடீரென வழக்கை முடித்து வைக்க அறிக்கை கேட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாஜிஸ்திரேட் அதை நிராகரித்திருக்க வேண்டும்,'' என்றார்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமன், ''போலீஸ் அறிக்கையை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொண்ட பின், அதை எதிர்த்து வழக்கு தொடர அமலாக்க துறைக்கு தகுதி இல்லை,'' என்றார்.வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் நோக்கமே, நாட்டின் பொருளாதார நலனை பாதுகாப்பது தான். இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தால், அந்த நோக்கம் வீணாகி விடும். மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மார்ச் 12ல் பணம் சிக்கியது. மார்ச், 2ல் விற்பனை ஒப்பந்தம் போட்டதாக சொல்கின்றனர். ஆனால், முத்திரைத்தாள் விற்றதே மார்ச் 13ம் தேதி தான். எனவே, சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற பணம் என்பது தெளிவாகிறது.பூர்வாங்க வழக்கை முடித்து வைத்து, 'மணி லாண்டரிங்' வழக்கை தடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர். மணி லாண்டரிங் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பூர்வாங்க வழக்கை முடித்து விட்டால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையிட அமலாக்க துறைக்கு உரிமை உள்ளது. பூர்வாங்க வழக்கில் உள்ள ஆரம்ப முகாந்திரத்தை சுப்ரீம் கோர்ட்டே ஏற்ற பின், போலீசார் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, குற்ற வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கலாம். போலீஸ் அறிக்கையும், அதை ஏற்று மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
அக் 29, 2024 20:33

நடப்பது அவர்களின் ஆட்சி , அப்புறம் எப்படி சிக்கல் , சிக்கல் வந்தால் அவருக்கு அண்ணா நகர் ரமேஷ் போன்று தான் நடக்கும்


ஆரூர் ரங்
அக் 29, 2024 15:07

ஸ்டாலினின் பொறுப்பிலுள்ள போலீஸ்துறை இவ்வழக்கை திடீரென முடித்து வைத்தது சந்தேகத்துக்குரியது. இதுமாதிரி குட்டுக்கு பிறகு அவர் இப்பதவியில் நீடிப்பது நீதிக்கு எதிரானது. தேர்தல் பத்திரம் பெற்றதற்கு நன்றிக் கடனா?


நிக்கோல்தாம்சன்
அக் 30, 2024 06:09

காருண்யா உள்ளத்தை கொண்ட ஸ்டாலின் என்ன செய்வார் ?


RAMAKRISHNAN NATESAN
அக் 29, 2024 10:00

நீதித்துறையில் ஊழல் புரையோடிக்கிடக்கிறது... திராவிட மாடலுக்கு நன்றி... சட்டமேதை அம்பேத்கருக்கு நன்றி .....


ஆரூர் ரங்
அக் 29, 2024 09:18

இதே ஆளின் மீது கேரள அரசு வழக்கு நடந்த போது மார்ட்டினுக்கு ஆதரவாக ஆஜராக அப்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை முதல்வர் கருணாநிதி அனுப்ப முயன்றது வெளியானது. திமுக இருக்கும் வரை இவர் மீது இங்கு நியாயமான விசாரணைக்கு வாய்பில்லை.


ஆரூர் ரங்
அக் 29, 2024 09:14

திமுக வுக்கு 550 கோடி தே.பத்திர தட்சணை கொடுத்தவுடன் நிரபராதியாகிவிட்டாரா? இனி இந்த வழக்கை தமிழக போலீஸ் கையில் விடக்கூடாது.


sankaranarayanan
அக் 29, 2024 09:03

நீதிமன்றம் அந்த மாஜிஸ்திரேட் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்பதுதான் இப்போது பிரதான கேள்வி இதேபோன்று ஒரு அப்பாவி வழக்காக இருந்திருந்தால் அரசு என்னபாடு அவரை படுத்தியிருக்கும் ஏன் இன்னும் தாமத செய்யாமல் அந்த குற்றப் பின்னணியில் இருக்கும் அந்த மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதி மன்றமே தயங்குகிறது இதற்கு ஒரு பாடம் கற்பிக்கவில்லை யென்றால் இதேபோன்று இனி பல வழக்குகள் தானாகவே முடிக்கப் பட்டு கேட்டப்பிரில்லாமல் போயிடும் நீதி செத்துவிட்டது என்றுதான் அர்த்தம் உச்ச நீதிமன்றம் முன் வந்து நீதிக்கு உயர் கொடுக்குமா


N.Purushothaman
அக் 29, 2024 06:46

நீதிமன்றம் அந்த மாஜிஸ்திரேட் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது ? இது போன்றவர்கள் உயர் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளானால் நீதி என்னவாகும்? மாஜிஸ்திரேட் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாதது போன்றவற்றை காரணம் கட்டி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ....


Palanisamy Sekar
அக் 29, 2024 06:18

இப்படியேதான் பல்வேறு நபர்களுக்கு ஆதரவாக போலீஸ் நடந்துகொண்டு பல்வேறு வழக்குகளிலிருந்து விடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழக ஆளும் தரப்புக்கு மிக வேண்டிய நபர்களுக்கு இப்படிப்பட்ட சலுகைகள் கிடைத்துள்ளன. குறிப்பாக பொன்முடி வழக்கை சொல்லலாம். மீண்டும் விசாரணைக்கு வந்தபின்னர்தான் அவருக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மூன்றாண்டு தண்டனையை கொடுக்க முடிந்தது. அதேபோல பெரியசாமி கே கே எஸ் எஸ் ஆர் கருப்பன் போன்றோரும் சர்வசாதாரணமாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும் வழக்கை விசாரிக்க சொன்னது. இப்படி நீண்டுகொண்டே போகும் வழக்கில் இப்போ மாட்டிக்கொண்டது கருணாநிதியின் குடும்பத்துக்கு மிக நெருக்கமான மார்ட்டின். இதனால் கோபம் கொள்ளுகின்ற திராவிட மாடல் அரசு, சட்டமன்றத்தில் அமலாக்கத்துறையை தமிழ்நாட்டுக்குள் வரவிடாமல் தடுக்க சிறப்பு சட்டம் கூட போடுவார்கள். எப்படி சிபிஐ தமிழகத்தில் நுழையக்கூடாது என்று சட்டம் போட்டார்களா அதே போன்று அமலாக்கத்துறையும் நுழையாமலிருக்க மார்ட்டினுக்காக செய்தாலும் செய்வார்கள் சட்டத்தில் ஓட்டை ஏதுமிருந்தால். இதுபோன்ற ஒரு ஆளும் கட்சியை இதுவரை இந்தியாவே கொண்டிருக்காது. இவ்வளவு வந்தடைந்து கூட இந்த அரசின் நடவடிக்கையை பற்றி பேச எந்த ஊடகமும் இல்லாமலே போயிற்று. என்னமோ தினமலர் மட்டுமே இந்த செய்தியை கொண்டுவந்துள்ளது. தினமலரும் இல்லைன்னா பல விஷயங்களை தமிழக மக்கள் காதுகளில் விழ சந்தர்ப்பமே இருந்திருக்காது. மார்ட்டின் வழக்கு விசாரணையால் கோபம் கொள்ளும் தமிழக ஆளும் தரப்பு இன்னும் மோசமாக விமர்சிக்கும் மத்திய ஆளும் அரசை.


Kasimani Baskaran
அக் 29, 2024 05:46

மொத்தத்தில் மாநில அளவில் நீதித்துறை அழுகிப்போய் இருப்பதை இது போன்ற பல வழக்குகள் காட்டுகின்றன.


முக்கிய வீடியோ