உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லவ் ஜிகாத் வாலிபர் தலைமறைவு : எஸ்.ஐ., இருவர் பணியிட மாற்றம்

லவ் ஜிகாத் வாலிபர் தலைமறைவு : எஸ்.ஐ., இருவர் பணியிட மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து, திருமணம் செய்து சீரழித்த விவகாரத்தில், முஸ்லிம் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், வழக்கை அலட்சியமாக கையாண்டதாக மகளிர் எஸ்.ஐ.,க்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவருக்கு சொந்தமான கட்டடத்தில், முஸ்லிம்பூரை சேர்ந்த அப்துல் கைப், 21, என்பவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர், 17 வயது ஹிந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அக்., 23ல் கடத்திச்சென்றார்.இதுகுறித்து, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், அந்த சிறுமியின் தந்தை அக்., 25ல், புகாரளித்தார். 27ல், இரு தரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார், சிறுமியை தந்தையுடன் அனுப்புவதாக எழுதி வாங்கிக்கொண்டு, அப்துல் கைப்புடன் அனுப்பினர்; வழக்கு பதியவில்லை.இதுபற்றி சிறுமியின் தந்தை, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் மீண்டும், அக்., 29ல் புகார் செய்து, சிறுமியை மீட்டு சென்றார். ஆனாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால், அக்., 27 அன்றே, அப்துல் கைப் மற்றும் அவரது பெற்றோர், சிறுமிக்கு பெயர் மாற்றி, 'புர்கா' எனும் உடை அணிவித்து, உருதில் எழுதப்பட்ட ரிஜிஸ்டரில் கையெழுத்திட வைத்து, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து, கட்டாயப்படுத்தி முதலிரவு நடத்தியதாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தன் தந்தையிடம் தெரிவித்தார்.மேலும், இதில் ஈடுபட்ட யார் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கடந்த 19ல், சிறுமியின் பெற்றோர், வி.எச்.பி., நிர்வாகிகளுடன் சென்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், வழக்கை மாவட்ட ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் விசாரிக்க, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டார்.சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்த அப்துல் கைப் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ள போலீசார், அவர் தலைமறைவாகி விட்டதாக கூறி, தேடி வருகின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, காப்பக கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இந்த வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்.ஐ., அமுதாவை, கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சி.எஸ்.ஆர்., வழங்கிய எஸ்.ஐ., விஜயவாணியை, பாரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டார்.இதுகுறித்து, மாவட்ட வி.எச்.பி., நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த விவகாரம் தொடர்பாக, சிறுமியையும், கடத்திய வாலிபர், அவரது பெற்றோரையும் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தான் விசாரித்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்