உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: 7ம் தேதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: 7ம் தேதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிச., 7 அன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அக்., மாதம் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வாரம் தமிழகத்தில் மிதமான மழையே பெய்யும் என வானிலை மையம் கணித்து உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள்( டிச.,7) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்து உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும், 12ம் தேதி வங்கக்கடலில் தமிழகம் - இலங்கை கடலோர பகுதிகளை அடையலாம் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

அதிக மழை எங்கே?

வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. அக்.,1 முதல் டிச., 5 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு, வழக்கமாக பதிவாகும் இயல்பான அளவு ஆகியவற்றை வெளியிட்டு உள்ளது. அதில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம்- 94, கிருஷ்ணகிரி-84விழுப்புரம்-71தர்மபுரி -63சேலம் -57கோவை-52 சதவீதம் மழை இயல்பை விட அதிகம் பெய்துள்ளது.அதேபோல் ஒன்பது மாவட்டங்களில் இயல்புக்கு குறைவாக மழை பெய்துள்ளது.தூத்துக்குடி- மைனஸ் 41தென்காசி - மைனஸ் 39விருதுநகர் - மைனஸ் 27 சதவீதம் மழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rafiq Ahamed
டிச 06, 2024 05:49

7ஆம் தேதி ஒரு வேலை புயல் உருவானால் சென்னை மற்றும் தமிழகம் இரண்டுக்கும் எந்த பாதிப்பும் வராது...


Ramesh Sargam
டிச 05, 2024 23:24

வருகிறது Fengal Part 2. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் தமிழக மக்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை