மது விற்பனை குறைவால் குறைந்த மதிப்பு கூட்டு வரி வருவாய்
சென்னை:கடந்த ஜூனில், ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசின் பங்கு போன்றவற்றால், தமிழக வணிக வரித்துறைக்கு, 11,160 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் வணிக வரித் துறையின் ஒட்டுமொத்த வருவாய், 11,160 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 11,064 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் கிடைத்த மொத்த வருவாயில், ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசின் பங்கு, 6,324 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு ஜூலையில், 5,733 கோடி ரூபாயாக இருந்தது. இதே மாதங்களில் மதிப்பு கூட்டு வரி, 5,331 கோடி ரூபாயில் இருந்து, 4,836 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு கடந்த ஜூனில், மது வகைகள் விற்பனை குறைந்திருப்பதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.