உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொய் சொல்லலாமா? சட்டசபையில் விவாதம்

 பொய் சொல்லலாமா? சட்டசபையில் விவாதம்

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்: நிதியமைச்சர் மரிய வில்சன்: பொய் சொல்லாமல், நேர்மையாக இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு முதல்வர் விஜய் உதாரணம். சபாநாயகர் பிரபாகர்: சட்டசபையில் 'பொய்' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, 'உண்மைக்கு மாறாக' என, மாற்றி பேசவும். தி.மு.க., தங்கம் தென்னரசு: சட்டசபை யில் ஒருவரை குறிப் பிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்று தான் சொல்லக் கூடாதே தவிர, 'பொய்' என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்பதல்ல. அப்படியெனில், 'பொய்யாமை' எனத் தொடங்கும் திருக்குறளை, இங்கே சொல்ல முடியாது. நிதியமைச்சர் மரிய வில்சன்: தங்கம் தென்னரசுக்கு நன்றி. அ.தி.மு.க., பழனிசாமி: சட்டசபையில் 'பொய்' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்பது மரபாக இருந்து வருகிறது; அதையே பின்பற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை