உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாத நபரின் பணி நியமன ஆணை ரத்து; எஸ்.பி.ஐ., உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாத நபரின் பணி நியமன ஆணை ரத்து; எஸ்.பி.ஐ., உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடன் தொகைகளை செலுத்தாமல் மோசமான சிபில் (CIBIL) ஸ்கோரை வைத்த ஊழியரின் பணி நியமனத்தை ரத்து செய்த எஸ்.பி.ஐ., வங்கியின் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொதுத்துறை நிறுவன வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ., வங்கி, சி.பி.ஓ., (CBO) என்ற பணியிடத்திற்கு ஒருவரை நியமனம் செய்தது. அதன்பிறகு, அந்த நபரின் சிபில் ஸ்கோரை ஆய்வு செய்து பார்த்த போது, 3 தனிப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு தொகைகளை செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரின் பணி நியமன உத்தரவை எஸ்.பி.ஐ., வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த பணிக்கு நியமிக்கப்படுபவர்கள், எந்த கடன் நிலுவை தொகையையும் வைத்திருக்கக் கூடாது என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில் வாதமாக முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாலா, 'விண்ணப்பத்தில் சிபில் ஸ்கோர் தெளிவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை கையாளும் நபர், பண விவகாரத்தில் ஒழுக்கம் கடைபிடிப்பதே முறையானதாக இருக்கும். சிபில் ஸ்கோர் சரியாக இல்லாதவர் மீது எப்படி நம்பிக்கை வரும்,' என்று கேள்வி எழுப்பினார். எனவே, சிபில் ஸ்கோரை காரணம் காட்டி, பணி நியமன ஆணையை எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் ரத்து செய்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெயன்
ஜூன் 27, 2025 08:27

அந்த ஆளு ப.ஜ வில் சேரலாம். கொஞ்சம் வாயை வளர்த்துக் கொண்டால் நண்பர்களே மாசம் மூணு, நாலு லட்சம் செலவுக்குக்.குடுப்பார்கள்.


Natarajan Ramanathan
ஜூன் 26, 2025 21:38

வங்கியில் கடன் வாங்கி படிப்பவர்கள் டிகிரி சர்டிபிகேட்டில் ஆதார் விபரங்கள் மற்றும் வங்கி கடன் விபரங்கள் பதியப்படவேண்டும். அந்த கடன் முழுமையாக தீரும் வரை எங்கு வேலைக்கு சேர்ந்தாலும் சம்பளம் அந்த வங்கி மூலமே செலுத்தப்படவேண்டும்.


திகழ்ஓவியன்
ஜூன் 26, 2025 23:06

அப்போ அதானி அம்பானி க்கு எல்லாம் சிபில் ஸ்கோர் கிடையாதா , அப்படி இருந்தா அரசு என் வாரா கடன் தள்ளுபடி 26 லட்சம் கோடி செய்யணும் இதை கோர்ட் கண்டிக்காதா


P.Sekaran
ஜூன் 26, 2025 18:08

இது மாதிரி வழக்கு கோர்டுக்கு செல்லும்போது அரசியல் வாதிகள் தப்பித்துவிடுகிறார்கள்.அது ஏன்? நமது சட்டத்தில் ஓட்டைகள் ஏராளமாக உள்ளது. பணம் எல்லாவற்றையும் சாதித்து விடுகிறது


ponssasi
ஜூன் 26, 2025 17:02

ஆதார் கார்டில் அனைத்து விபரங்களும் கொண்டுவரவேண்டும், வங்கி கணக்குகள், கடன்கள், பதியப்பட்ட வழக்குகள், தீர்ப்பு அளிக்கப்பட்டவை நிலுவை சொத்துக்களை. ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை அவன் ஆதார் கொண்டு அரசு தீர்மானிக்கவேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 26, 2025 16:31

சரியான தீர்ப்பு. அதே சமயம் அந்த நபரின் சிபில் தகுதியை சரியாக விசாரிக்காமல் எப்படி அவருக்கு வேலை கொடுத்தார்கள்?


Thravisham
ஜூன் 27, 2025 07:16

உங்கள் கருத்து நீதிபதியின் கருத்தை விட சிறந்தது. இவருக்கு பணி நியமனம் வழங்கியவர் உடனடி தூக்கி ஏறியனும்


suresh guptha
ஜூன் 26, 2025 15:50

IN THAT CASE ONLY POLITICIAN CAN JOIN


Tiruchanur
ஜூன் 26, 2025 15:00

சரியான தீர்ப்பு. மக்கள் பணத்தை கையாள்பவர் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும் என்பதில் எந்த ஸந்தேஹமும் இருக்க கூடாது. இதே போல் அரசியல்வாதிகளுக்கும் இந்த தீர்ப்பு நீட்டிக்கப்படவேண்டும்


முக்கிய வீடியோ