உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் அவமதிப்பில் கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..

கோர்ட் அவமதிப்பில் கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி என்று தீர்மானித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்பதை நிரூபிக்க, ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, அவருக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ், ஆறு கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.இக்கல்லுாரிகளில் காலியாக இருந்த, 130 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நுாலகர், ஒரு உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்தாண்டு அறக்கட்டளை நிர்வாகி அறிவிப்பு வெளியிட்டார்.

தள்ளுபடி

இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை, உயர் நீதிமன்ற, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, 'ஆசிரியர்கள் இல்லாமல் கல்லுாரி செயல்பட முடியாது. கல்வி நடவடிக்கை முடங்கி விடும்; மாணவர்கள் பாதிக்கப்படுவர்.'எனவே, உதவிப் பேராசிரியர் தேர்வு நடவடிக்கைகளுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை' என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், தகுதி பெற்ற 754 விண்ணப்பதாரர்களை நேர்முக தேர்வு செய்ய, சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கு உரிய தேதிகளை தெரிவித்தும், அப்பல்கலைகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காததை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இரு நிபுணர்களை, பல்கலைகள் அனுப்பி வைக்க வேண்டும்; தேர்வு நடவடிக்கைகளை தொடர வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன், கல்லுாரி கல்வி இயக்குநரகம், உயர் கல்வி துறை மற்றும் சென்னை பல்கலை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு பிளீடர் டி.ரவிச்சந்தர், அண்ணாமலை பல்கலை சார்பில், வழக்கறிஞர் சித்திரை ஆனந்தம் ஆகியோர் ஆஜராகினர்.அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:'டிவிஷன் பெஞ்ச்' தீர்ப்பை மீறுவதற்காக, ஒருங்கிணைந்த முயற்சி நடந்து உள்ளது என்பது தெரிகிறது.உத்தரவுக்கு மாறாக, அனைத்து அரசு அதிகாரி களும், துரதிருஷ்டவசமாக காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டிய தங்கள் கடமையை மறந்து, முழு செயல் முறையையும் முடக்கும் தீய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்றே தோன்றுகிறது.அதாவது, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், 34 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறி, 126 பேரின் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது, நீதிமன்ற அவமதிப்பு செயல்.

பரிந்துரை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லுாரி கல்வி இயக்குநர் குற்றவாளி என்று, இந்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இருப்பினும், நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதிக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கல்லுாரி கல்வி இயக்குநர், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை, ஜூன் 2ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது.அதேபோல, பொது நல வழக்கில், டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KSB
ஏப் 27, 2025 19:28

If the court finds him guilty, then why should not he be punished?


R. THIAGARAJAN
ஏப் 27, 2025 19:26

Government officers neither adhering their basic parameters nor Respecting court orders it has be treated as punishable and criminal offences. The court must teach them good lessons to put an end for all such code of violations. Also each and every Government office must be displayed the relevant IPC TO ENABLING THEM THE INNOCENCE CAN ADD THE RELEVANT IPC IN THEIR REMINDERS PRIOR TO APPEAL THE COURT.


SAMPATH.S
ஏப் 27, 2025 16:13

குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளின் கை ஓங்கியிருக்கிறது. எந்த ஒரு நீதிமன்ற உத்தரவையும் அமுல்படுத்தாமல் வாங்கிக் கட்டிக் கொள்வது தொடர்கிறது. ரிட், ரிட் அப்பீல், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு, பின்னர் சீராய்வு மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் துறையின் தலைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமுல்படுத்தாமலிருப்பது என்ற போக்கு தொடர்கிறது.


Barakat Ali
ஏப் 27, 2025 09:00

ஜாமீன்தானே கொடுத்தோம், நீயி எப்படி முந்திரியானே ன்னு உச்சம் ரெண்டு தடவை கேட்டும் கமுக்கமா இருந்த செபா கோர்ட்டு அவமதிப்பு செய்யலியா ????


thehindu
ஏப் 27, 2025 09:00

தங்கள் சுய சரிதைகள் கோபங்களை இந்துமதவாத சூழ்ச்சிகளை .மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக தீர்ப்பாக வழங்கி கோர்ட்டை நீதிபதிகள் அவமதிக்கவில்லை என்று நிரூபிப்பது எப்போது


V Venkatachalam
ஏப் 27, 2025 07:35

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை செய்தி படித்தேன். அதற்கும் இந்த விரைவான தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன். 126 பேர்கிட்டேயிருந்து நாங்க நிர்ணயித்த லஞ்சம் கிடைக்கவில்லை மை லார்ட்.


Kasimani Baskaran
ஏப் 27, 2025 07:13

130 பணியிடங்கள். ஆளுக்கு பத்துலட்சம். எப்பேர்ப்பட்ட நல்ல வாய்ப்பு.


Sundar Venkat
ஏப் 27, 2025 06:12

நல்லது. இதே போல் அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரியுங்கள். கடும் தண்டனை இருக்கட்டும் நாடு திருந்தட்டும் . ஒரு வழக்கில் கடுமை மற்ற எல்லாவற்றிலும் சுணக்கம் என்று இருப்பதால் நீதித் துறையை மக்கள் மதிப்பதில்லை.


புதிய வீடியோ