உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயணியை ஆபாசமாக பேசிய அரசு பஸ் கண்டக்டர்: போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட்

பயணியை ஆபாசமாக பேசிய அரசு பஸ் கண்டக்டர்: போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட்

மதுரை: மதுரையில் பயணியை ஆபாசமாக திட்டிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு: மதுரை நகரின் பல பகுதிகளில் ஏராளமான தாழ்தள பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை முறையாக ஏற்றிச் செல்வதில்லை என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. இந்நிலையில், மதுரை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தக்கோரி கை நீட்டி உள்ளார். அதே நேரத்தில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த போக்குவரத்து சிக்னலில் பச்சை ஒளி விளக்கு எரியவே பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.அப்போது இதை கவனித்த வாலிபர், மீண்டும் பஸ்சை நிறுத்துமாறு கைகாட்டி உள்ளார். இதைக் கண்ட டிரைவரும், கண்டக்டரும், அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி வசைபாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் சிக்னல் அருகே எதற்காக பஸ்சை நிறுத்த கோருகிறாய் என்று கூறிய படியே பஸ்சில் இருந்து கண்டக்டர் இறங்கி உள்ளார். பின்னர் நேராக பஸ்சை நிறுத்தக் கோரிய வாலிபரிடம் சென்று அவரை திட்டுகிறார். பதிலுக்கு வாலிபரும் ஏதோ சொல்ல, மீண்டும் அவரை கண்டக்டர் திட்டியபடியே பஸ்சில் ஏறுகிறார்.இந்த வசைபாடல் சம்பவத்தை அங்குள்ள யாரோ ஒருவர் தமது செல்போனில் வீடியோ காட்சிகளாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டு உள்ளார். பயணி ஒருவரை பஸ் கண்டக்டர் பொறுப்பற்ற முறையில் பேசுவதா என்று கேள்விகள் எழுந்தன.வீடியோ வைரல் ஆன நிலையில், அந்த குறிப்பிட்ட பஸ்சின் கண்டக்டர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அனைத்து பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Easwar Samban
ஜூன் 18, 2025 21:11

சிக்னலுக்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப் மாற்றவும். டிரைவருக்கு சிக்னலை பார்த்தவுடன் நிறுத்தத்தோன்றாது. சென்னையில் சிம்சனுக்கு மிக அருகில் சிக்னல் உள்ளதால் சில‌பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுகிறது. அதேபோல் எழும்பூர் சிக்னலுக்கு மிக அருகில் பஸ் ஸ்டாப் உள்ளதால் பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகிறது. இதற்கெல்லாம் விடிவு இல்லையா ?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 17, 2025 04:33

இவனுங்களுக்கெல்லாம் எதற்கு அரசு வேலை


Ramesh Sargam
ஜூன் 16, 2025 20:13

அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திமுக ஆட்சியில் என்னவேண்டுமானாலும் அக்கிரமம் செய்யலாம் என்கிற நினைப்பில் பணியாற்றுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை