UPDATED : மே 01, 2024 09:37 PM | ADDED : மே 01, 2024 09:04 PM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் உடல் நிலையை காரணம் காட்டி மே 14 முதல் தமது பதவியை ராஜிநாமா செய்வதாக கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இப்பல்கலையில் 2022 ஏப்., 1ல் துணைவேந்தராக இவர் பதவியேற்றார். பல்கலையில் நிதி நெருக்கடி, விதி மீறி பதவி உயர்வு, சம்பள வழங்க முடியாமை உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தன.அதேநேரம் இருதய கோளாறு உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஏப்., 30ல் தமது பதவியை ராஜிநாமா செய்வதாக கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பினார். அதில், உடல் நிலை காரணமாக மே 14 முதல் தமது துணைவேந்தர் பதவியக ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். பதவிக் காலம் இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் இவரது ராஜிநாமா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.