உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா :ஒன்பதாம் நாள்

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா :ஒன்பதாம் நாள்

சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில் திக்குவிஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் வீரத்தை நிலைநாட்ட எல்லா நாட்டுக்கும் படையெடுத்துச் செல்வர். பாண்டிய இளவரசியான மீனாட்சி திக்கு விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார். பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர்கள் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெற்றி கொண்டாள். அதன் பின் சிவனின் கைலாயம் நோக்கி புறப்பட்டாள். நந்தீஸ்வரர் தலைமையில் சிவகணங்களுடன் மோதி தோற்கடித்தாள். இறுதியில் சிவனே போர் புரிய வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரது அழகில் மனதைப் பறிகொடுத்தாள். நாணத்தால் முகம் சிவந்தாள். 'இவரே உன் மணாளர்' என அசரீரி ஒலித்தது. திக்குவிஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது.இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கும். தைரியம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ