உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி மீது மதுரை பெண் புகார்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

பொன்முடி மீது மதுரை பெண் புகார்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

மதுரை: ஆபாசமாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீதும், அவர் பேசிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மதுரை, புதுார் கற்பகநகரைச் சேர்ந்தவர் மைவிழிச்செல்வி; ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவில் இருக்கிறார்.இவர், போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு அனுப்பிய புகார் மனு: நான், பிறப்பால் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவள். ஹிந்து மதத்தை முழுமையாக பின்பற்றி வருகிறேன். நான் சார்ந்திருக்கும் ஹிந்து மதத்தில் விபூதி பட்டை இடுவது, திருநாமம் இடுவது வழக்கமான ஒன்று. இந்த சமயக் குறியீடுகள், கோடிக்கணக்கான ஹிந்துக்களால் புனிதமாகக் கருதி பின்பற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழகத்தின் மூத்த அமைச்சரான பொன்முடி பேசும் பேச்சை, வீடியோவில் காண நேரிட்டது. அருவருக்கத்தக்க அந்த பேச்சு, என் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பிற மதத்தவர் முன், நான் சார்ந்த ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேச வேண்டும் என்பதற்காகவே, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பொன்முடி அதில் பேசியுள்ளார்.எனவே, அமைச்சர் பொன்முடி மீதும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி