உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகாளய அமாவாசை வழிபாடு; முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

மகாளய அமாவாசை வழிபாடு; முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.ஹிந்துக்கள் முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். இன்று (அக்.02) மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.* ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். ராமேஸ்வரம் கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம் தென்படுகிறது.* அதேபோல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.* சேலம் சுகவனேஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.* திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும், கோயில்களிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sridhar
அக் 02, 2024 13:26

தர்ப்பணம் முடிந்ததும் நேரே போய் திமுகவுக்கு வோட்டு போடுங்க , நம் பித்ருக்கள் சந்தோஷப்படுவார்கள்.


Lion Drsekar
அக் 02, 2024 13:00

இந்த அமாவாசை தப்பிவிட்டது, அடுத்ததுக்கு ஏதாவது ஒரு சட்டம் வரும், நீதிமன்றத்தில் வழக்கும் வரும், இனி எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்குள்ளேயே இதுபோன்ற சடங்குகளை செய்யவேண்டும் என்று, இதனால் பொதுமக்களுக்கு இடையூறு , போக்குவரத்து பாதிப்பு, கடல்நீர் மற்றும் குளங்கள் மாசு என்று மாற்றார் கற்ப்பிக்கும் அல்லது எழுதும் பாடலுக்கு ஆடவேண்டிய நிலை வரும், அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்


Ramesh Sargam
அக் 02, 2024 12:15

பெற்றோர்கள், பெரியோர்கள் அவர்கள் உயிருடன் இருந்தபோது அவர்களுக்கு எதுவும் நல்லது செய்யாமல் விட்டிருந்தாலும், இன்றைக்கு ஒரு நாலாவது அவர்களை நினைத்து தர்ப்பணம் செய்யவேண்டும். அப்படி செய்தால் இறந்தவர்கள் உங்களை மன்னித்து கட்டாயம் வாழ்த்துவார்கள்.


Nallavan
அக் 02, 2024 12:09

தர் -பணம் கொடுக்க வேண்டும்


Ramamoorthy M
அக் 02, 2024 12:50

பூனை வெளியில் வந்துவிட்டது.


Loganathan Kuttuva
அக் 02, 2024 10:50

கன்யாகுமரி கடர்கரையில் தர்ப்பணம் செய்பவர்கள் அதிகம் .


சமீபத்திய செய்தி