மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
2 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
3 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
3 hour(s) ago | 2
பெஞ்சில் அமர்ந்ததும் முதல் ஆளாக, ''எந்த தில்லுமுல்லும் நடக்க கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''அரசு பள்ளிகள்ல, அறிவியல் ஆய்வக பொருட்கள் வாங்குறதுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குவாவ வே... இந்த நிதியில, தலைமை ஆசிரியர்களே பொருட்கள் வாங்கிக்கலாம்...''ஆனா, பல வருஷமாவே, ஆளுங்கட்சி புள்ளிகளின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள், தமிழகம் முழுக்க அரசு பள்ளிகளுக்கான பொருட்களை சப்ளை பண்ணிட்டு, தலைமை ஆசிரியர்களிடம், 'செக்'கை மட்டும் வாங்கிட்டு போயிடும் வே...''அந்த பொருட்கள் தரமில்லாம தான் இருக்கும்... நடப்பு கல்வி ஆண்டுல, 13,210 அரசு பள்ளிகள்ல, வானவில் மன்றம் என்ற அறிவியல் திட்டம் அமலுக்கு வந்துட்டு... இதன் கீழ், 'எந்த புகாருக்கும் இடமில்லாம வெளிப்படையா, 'டெண்டர்' விட்டு, தலைமை ஆசிரியர்களே பொருட்களை வாங்கிக்கலாம்'னு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''தி.மு.க., கலரை அழிக்க வச்சுட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''திருச்சி, தென்னுார் உய்யகொண்டான் ஆற்றங்கரையில, மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகத்தின் நினைவிடங்கள் இருக்குது... மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை ஒட்டி, சமீபத்துல இங்க தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்துனாங்க பா...''இந்த வருஷம், நினைவிடத்தின் முன்புறம் தி.மு.க., கொடியின் கருப்பு, சிகப்பு கலரை ஆளுங்கட்சியினர் உத்தரவுப்படி, மாநகராட்சி சார்புல பெயின்ட் அடிச்சு வச்சிருக்காங்க...''இதைக் கேள்விப்பட்டு, அ.தி.மு.க., மாவட்ட செயலர் சீனிவாசன் கடுப்பாயிட்டாரு பா... 'மொழிப்போர் தியாகிகள் தி.மு.க.,வுக்கு மட்டும் சொந்தமில்ல... ஆளுங்கட்சி கலரை அழிக்கலைன்னா, நினைவிடம் முன் உண்ணாவிரதம் இருப்போம்'னு அதிகாரிகளிடம் ஆவேசப்பட்டிருக்காரு பா...''இதனால, நினைவிடத்துல ஆளுங்கட்சி கலரை வெள்ளை பெயின்ட் அடிச்சு மாநகராட்சி ஊழியர்கள் அழிச்சிருக்காங்க... அப்புறமா தான், அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''விட்டா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கே தி.மு.க., கலர் அடிச்சிடுவாங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''காங்கிரசிடம் இருந்து தொகுதியை மீட்க, களம் இறங்கிட்டாருங்க...'' என்றார்.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''விருதுநகர் லோக்சபா தொகுதி, இப்ப காங்., வசம் இருக்கு... இதை மறுபடியும் அ.தி.மு.க., கோட்டையா மாத்த, மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சபதம் போட்டிருக்காருங்க...''இதுக்காக, மாற்று கட்சிகள்ல முக்கியமான சிலரை துாக்க, 'ஸ்கெட்ச்' போட்டும் வச்சிருக்காருங்க... முதல் கட்டமா, தி.மு.க., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட சில கட்சிகள்ல இருந்து, 100 நிர்வாகிகளை சமீபத்துல அ.தி.மு.க.,வுல சேர்த்திருக்காருங்க...''மாவட்டம் முழுக்க, மாற்று கட்சிகள்ல அதிருப்தியில இருக்கிற நிர்வாகிகளை, நேர்ல பார்த்து வலையை வீசிட்டு வந்திருக்காரு... 'தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலர் அ.தி.மு.க.,வுக்கு வருவாங்க'ன்னு தன் ஆதர வாளர்களிடம் சொல்லிட்டு இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago | 2