உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது

ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது

மதுரை : திருச்சி மணப்பாறை அருகே பணியில் இருந்த கேட் கீப்பரை தாக்கியவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வரு கின்றனர். மதுரை கோட்டம் சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே லெவல் கிராசிங்கில் கேட் கீப்பராக உதயகுமார் பணியில் இருந்தார். நேற்றுமுன் தினம் இரவு 11:15 மணிக்கு போதையில் டூவீலரில் சென்ற இருவர் மூடியிருந்த கேட்டை திறக்கும்படி வாக்குவாதம் செய்து அவரை தாக்கினர். ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் இதில் ஈடுபட்ட அப்பகுதி பாக்கியராஜை 24, கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மற்றொருவரை தேடி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார். ''ரயில்வே கிராசிங் செயல்பாட்டில் குறுக்கிடுவது, கேட் கீப்பர்களிடம் தவறாக நடப்பது, ரயில் போக்குவரத்திற்கு இடையூறு செய்வது என ஈடுபடுவோருக்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்,'' என, போலீசார் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajagopalan R
ஆக 20, 2025 21:54

மது விற்பனை முதன் முதலில் கருணாநிதியின் முதல் ஆட்சியில் 1972 தொடங்கியது.தள்ளாத வயதில் ராஜாஜி கருணாநிதி வீட்டில் போய் மது விலக்கை நீக்காதே என்று கெஞ்சினார். அதை கேட்காததால், இப்ப தினம் ஒரு குடிகாரர் கொலையை பார்க்கிறோம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2025 12:46

அவர்களை போதையில் இருக்க வைத்த குடிகார திட்டத்தை கொண்டுவந்தவனுக்கு உங்கள் வோட்டு


Shivam
ஆக 18, 2025 20:32

2001 ல இதடாஸ்மாக் ஆரம்பிச்சது உங்க அம்மா JJ, அப்ப இருந்து போட்ட மப்பு உனக்கு தெளியலை


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2025 13:32

ஒரு ஆதாரம் கொடேன்? உண்மையில் பார்த்தால் நீ சொல்லும் வருடத்தில் திருமதி ஜெயலலிதா தனியார் விற்பனையாகங்களை அரசுடன் இணைத்தார், 2006 உனது இன்றைய அப்பாவின் அப்பா அதாவது உனது தாத்தா டாஸ்மாக் மூடுவேன் என்று கூறி பின்னர் மழுப்பினார், நேற்று உனது அப்பாவின் virtual சகோதரி மூடுவேன் என்றால் , பலமுறை உனது இன்றைய புதிய "அப்பா" இதனை மூடுவேன் என்று வாக்கு கொடுத்தாரே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை