மேலும் செய்திகள்
முதல்வர் கொடுத்த நம்பிக்கை
09-May-2025
ஈரோடு:அந்தியூர் அருகே, தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை, துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம், அந்தியூர், சென்னம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 79. புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பூபதி, 39. பூபதி வீட்டு வளர்ப்பு நாய், சுப்பிரமணியன் புதிதாக கட்டி வரும் வீட்டுக்குள் அடிக்கடி சென்று வந்தது.இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், தன்னிடம் இருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கியால் நாயை சுட்டார். நாய்க்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.பூபதி புகாரில், அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
09-May-2025