உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காதலிக்காக பெண் வேடமிட்டு தேர்வெழுத முயன்ற நபர் கைது

காதலிக்காக பெண் வேடமிட்டு தேர்வெழுத முயன்ற நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோட்காபுரா : பஞ்சாபில் காதலிக்காக தேர்வெழுத பெண் வேடமணிந்து சென்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பஞ்சாபில் உள்ள பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலையில் காலியாக உள்ள சுகாதார பணியாளர்இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது. இதற்கான கோட்காபுராவில் உள்ள டி.ஏ.வி. தனியார் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டது. இந்த மையத்தில் காலையிலேயே ஏராளமானோர் தேர்வு எழுத குவிந்தனர்.அவர்களில் ஒருவராக பசில்காவைச் சேர்ந்த அங்ரேஸ் சிங் என்ற இளைஞர் பெண்வேடமிட்டு தேர்வு எழுத வந்தார். தன் காதலிக்காக தேர்வு எழுத முயன்ற அவர் வளையல் லிப்ஸ்டிக் பொட்டு சகிதமாக வந்ததுடன் மட்டுமின்றி போலி ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை காண்பித்து பல்கலை அதிகாரிகளை ஏமாற்றினார். இருப்பினும்தேர்வுக்காக 'பயோ - மெட்ரிக்' எனப்படும் கைரேகையை வைக்க முயன்ற போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.இது குறித்து பல்கலை நிர்வாகம் அளித்த புகாரைதொடர்ந்து அங்ரேஸ் சிங்கை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பரம்ஜித் கவுர் என்ற தன் காதலிக்காக அங்ரேஸ் தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் விண்ணப்பம் பல்கலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மோசடி கும்பலுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

mrsethuraman
ஜன 16, 2024 14:25

அந்த பெண்ணையும் கைது செய்ய வேண்டும்


R S BALA
ஜன 16, 2024 12:29

என்னத்துக்கு கைரேகை.. மூஞ்சிய பார்த்தாலே தெரியுதுல்ல ஆம்பளைன்னு..


g.s,rajan
ஜன 16, 2024 12:11

மொத்தத்தில் இரண்டு பரீட்சையிலும் பெயில்,ஒண்ணு,ரெண்டு ,மூணு ,,,ஒண்ணு,ரெண்டு,மூணு ..கம்பி எண்ணட்டும் .....


Pandi Muni
ஜன 16, 2024 21:53

நல்ல வேலையா தத்தி சின்ன தத்தி காலத்தில பயோ மெட்ரிக் அனுமதி கண்டுபிடிக்கப்படல


Rpalnivelu
ஜன 16, 2024 11:36

...காதலுக்காக தேர்வு எழுதி சிறைக்குச்சென்ற காதலன்... நல்ல டைட்டில்


g.s,rajan
ஜன 16, 2024 11:33

ஆசை யாரை விட்டது ...???


J.V. Iyer
ஜன 16, 2024 08:13

முக்காடு போட்டால் கேட்கமாட்டார்கள். நன்றாக ஏமாற்றலாம்.


Vathsan
ஜன 16, 2024 11:38

சிங்கப்பூர் சென்று கூட பிரிவினை புத்தி போகவில்லையா? எதற்கு எடுத்தாலும் ....


ஆரூர் ரங்
ஜன 16, 2024 07:28

இங்கிலீஷை வடக்கில் ஆங்கிரேஸ் என்பர். எனவே அது ஆங்கிலத் தேர்வே.


Mani . V
ஜன 16, 2024 06:36

இதுவே தமிழகப் பெண்களாக இருந்தால் தாலி, தோடு, மூக்குத்தி, மெட்டி, வளையல் எல்லாம் கழட்டியிருப்போம். வடநாட்டு ஆசாமி என்பதால் சவுரி, கம்பளி குல்லா, உடல் முழுவதும் மறைத்த ஆடை, வளையல் என்று இருந்தும் நாங்கள் ஒன்றும் செய்யவே இல்லை.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 16, 2024 08:59

சிங்கப்பூர் சென்று கூட பிரிவினை புத்தி போகவில்லையா? எதற்கு எடுத்தாலும் வடநாடு, தென்னாடு என்று. மற்ற தென் மாநிலங்களில் ஹிந்தி படிக்கிறார்கள். நீ ஏன் படிப்பதில்லை? கொத்தடிமைகள் திருந்தவே மாட்டீர்களா ?


Ramesh Sargam
ஜன 16, 2024 06:22

காதல் படுத்தும் பாடு.


D.Ambujavalli
ஜன 16, 2024 06:07

அவராலானது காதலிக்கு நல்ல ‘பரிசு’ கொடுத்து எதிர் காலத்தை பாழாக்கி, தானும் சிறை சென்றுள்ளார் இவ்வளவு கண்மூடிக் காதலா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை