உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுக்கடையில் தீப்பெட்டி தகராறு; கத்தியால் குத்தி ஒருவர் கொலை

மதுக்கடையில் தீப்பெட்டி தகராறு; கத்தியால் குத்தி ஒருவர் கொலை

போத்தனுார்: மலுமிச்சம்பட்டியிலுள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் நேற்று முன்தினம், போடிபாளையம், கே.கே. வீதியை சேர்ந்த ஜெயக்குமார், 28 தனது நண்பர்கள் ஜீவன் பிரசாத், 28, மதன்குமார் 30 ஆகியோருடன், மது குடித்தார்.அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவர், ஜெயக்குமாரிடம் சிகரெட் பற்ற வைக்க, தீப்பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது குடித்த பின், மதன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார்.இதன் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை ஜெயக்குமார், ஜீவன் பிரசாத்துடன் ஈச்சனரிக்கு முன் பைபாஸ் சாலை சந்திப்பிலுள்ள ஒரு பேக்கரியில் டீ குடிக்க வந்து, பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது மது பாரில் தகராறு செய்த இருவரும், காரில் வந்தனர். ஜெயக்குமாருடன் மீண்டும் அந்நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜெயக்குமாரின் கழுத்தில் குத்தினார். அவ்விருவரும் காரில் தப்பினர்.படுகாயமடைந்த ஜெயக்குமாரை அவரது நண்பர் ஆம்புலன்சில் சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார்.தகவலறிந்த மதுக்கரை போலீசார், சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் காணப்பட்ட குற்றவாளிகள் தப்பிய காரின் பதிவெண்ணை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவித்தனர். மாவட்ட எல்லையில் கார் சிக்கியது. அதனை ஓட்டிச்சென்ற தற்போது ஆத்துபாலத்தில் கால் டாக்ஸி டிரைவராக உள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த முஹமது ஹாரூன், 32 என்பவரை கைது செய்தனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில், கத்தியால் குத்தியது முஹமது ஹாரூன் என்பதும், உடனிருந்தது குறிச்சியை சேர்ந்த கார் டிரைவர் விக்ரமன், 24 என்பதும் தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:17

டாஸ்மாக் தனது வாடிக்கையாளர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் வசதி செய்து தரவும். அவர்களால் அமைந்த அரசு.


சந்திரசேகர்
ஜூலை 08, 2025 14:06

ஆத்திரத்தில் கொலை செய்யும் ஒருவனுக்கு தண்டனையில் கருணை காட்டலாம். ஆனால் திட்டமிட்டு கொலை செய்யும் கூலிப்படை மற்றும் இந்த மாதிரி நபர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுத்தால் தான் கொலைகள் கொஞ்சமாவது குறையும்.அப்புறம் இந்த மாதிரி நபர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள்.கொலை குற்றத்திற்கு ஜாமீன் கொடுப்பது தேவையில்லாத ஒன்று.அப்படி ஜாமீன் கொடுத்தால் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இன்னொரு கொலை செய்ய வாய்ப்பாக அமையும்


Keshavan.J
ஜூலை 08, 2025 10:09

ஒரு குடிகாரன் இறப்பு. டாஸ்மாக் வரவு குறையும். விடியல் ஆட்சிக்கு பணம் நஷ்டம் 2 வோட்டு நஷ்டம். பாய் ஜெயிலுக்கு போனால் வோட்டு நஷ்டம் தானே


Sampath
ஜூலை 08, 2025 09:49

இறந்த நபருக்கு இழப்பீடு 10 லக்ஷம் பணம் அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசாங்க வேலை, நடக்க கூடாதது நடந்து விட்டதாக முதல்வர் போன் பேசி யூடூபில் வெளியிட .....செய்வார்களா .....செய்வார்களா ...செய்வார்களா


ஜூலை 08, 2025 16:20

அரசுக்கு வருமானம் தரும் ஒருவர் இறந்திருக்கிறார் .. ஓன்றிய அரசு இரங்கல் செய்திகூட வெளியிட வில்லை என்பது வேதனையாக இருக்கிறது


raja
ஜூலை 08, 2025 08:40

சட்டமடா ஒழுங்குடா திருட்டுடா திராவிடம் டா மாடலடா விடியலடா ...


ஜூலை 08, 2025 06:49

அடடா ஒரு மது பிரியர் இறந்து விட்டார் நிச்சயம் டாஸ்மாக் விற்பனை குறையும் ..அரசு வருமானம் குறையும் .அவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பத்து லட்சம் தரவேண்டும் ...கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் ..அவர் வீட்டில் உள்ள ஒருவருக்கு குறைந்த பட்சம் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவி தரவேண்டும் ...குடி இழப்பை ஈடுகட்ட ,,பத்து புது மது ஆர்வலர்களை உடனடியாக மின்னல் வேகத்தில் உருவாக்க வேண்டும் ..அவர்களுக்கு தீவிர -பயிற்சி கொடுக்கவேண்டும் .. அதற்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க முடுக்கி விடபட வேண்டும்


Kjp
ஜூலை 08, 2025 07:59

ஆட்சியாளர்களுக்கு செம் அடி பதிவு. எந்த கொம்பும் குறை சொல்ல முடியாத ஆட்சியப்பா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை