மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2157 கோடியில் 4 வழிச்சாலை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: மரக்காணம், புதுச்சேரி இடையே ரூ.2157 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.பிரதமர் மோடி தலைமையில் டில்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (ஆக.8) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில் குறிப்பாக மரக்காணம்-புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2157 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து புதுச்சேரி வரையான தூரம் 46 கிலோ மீட்டர் ஆகும். இந்த சாலை விரிவாக்கத்தால் 20 நிமிடங்களில் புதுச்சேரிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.