பிரதமரின் 75வது பிறந்த நாள் 75 இடங்களில் மாரத்தான்
சென்னை: 'தினசரி குறிப்பிட்ட நேரம் ஓடுவதன் வாயிலாக, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துஉள்ளார். அவரது அறிக்கை: பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி, போதைப் பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கும் நோக்கில், நாடு முழுதும் 75 இடங்களில், ஒரே நேரத்தில் 'மோடி யுவா ரன்' எனும் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பா.ஜ., இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா துவக்கி வைத்தார். தமிழகத்தில் சேலம் மாநகரில், அந்த போட்டியை துவக்கி வைத்து பங்கேற்றேன். தினசரி குறிப்பிட்ட நேரம் ஓடுவதன் வாயிலாக, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்ற விழிப்புணர்வை, இந்த நிகழ்வின் வாயிலாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.